News October 20, 2024
கிரிவலப் பாதையில் நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் பௌர்ணமி மற்றும் முக்கிய நாட்களில் தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கானோர் கிரிவலம் வருவது வழக்கம். இந்நிலையில் கிரிவலப் பாதையில் நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை நெடுஞ்சாலைத் துறையினர் இன்று அதிரடியாக அகற்றினர்.
Similar News
News July 10, 2025
தி.மலை: சொந்த வீடு கட்ட சூப்பர் திட்டம்

ஏழை எளிய மக்களுக்கு வீடு வழங்கும் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் புதியாக 1 லட்சம் வீடுகள் கட்டப்பட உள்ளது. இதில் வீடு கட்ட ரூ.3.50 லட்சம் மானியம் வழங்கப்படும். வயதானோர்/ ஆதரவற்றோருக்கு அரசே கட்டுமான பணிகளை செய்து தருகிறது. இதற்கான KVVT survey குழுவினர் பயனாளிகளை தேர்வு செய்வர். தனியாக விண்ணப்பிக்க விரும்பினால் ஊராட்சி மன்றம்/ ஆட்சியர் அலுவலகத்தை(04175233333) அழைக்கலாம். ஷேர் பண்ணுங்க. <<17015892>>தொடர்ச்சி<<>>
News July 10, 2025
கலைஞர் கனவு இல்லத் திட்ட விவரங்கள்

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் சேர சொந்தமாக 350 ச.அடி நிலமும், பட்டாவும் இருக்க வேண்டும். சொந்தமாக கான்கிரீட் வீடு இருக்க கூடாது. குடிசை வீடு எனில் ஒரு பகுதி ஓடு/ கான்கீரிட்டாக இருக்க கூடாது. கிராமப்புறத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். அந்த நிலத்தை வணிக நோக்கில் பயன்படுத்தி வந்தால், விண்ணப்பிக்க இயலாது. *சொந்த வீடு கனவை நனவாக்கும் சூப்பர் திட்டம் சீக்கிரம் அப்ளை பண்ணுங்க. அப்டியே ஷேர் பண்ணுங்க*
News July 10, 2025
திருவண்ணாமலையில் 2,173 பேர் கைது

மத்திய அரசின் தோழிலாளர் விரோத சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்பது உள்பட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய வேலைநிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் நேற்று நடைபெற்றது. அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் தொழிற்சங்கங்கள் சார்பில் 12 இடங்களில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 413 பெண்கள் உள்பட 2,173 பேர் கைது செய்யப்பட்டனர்.