News March 31, 2024

கிரிக்கெட் விளையாடிய பாஜக வேட்பாளர்

image

நீலகிரி, குந்தா தாலுக்கா, மஞ்சூர் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்ய நீலகிரி மக்களவைத் தொகுதி வேட்பாளர், மத்திய அமைச்சர் எல்.முருகன் இன்று மாலை 3 மணியளவில் சென்றார். அப்போது அங்கு விளையாட்டு மைதானத்தில் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தார்கள். அதை பார்த்த வேட்பாளர் எல்.முருகன் மைதானத்தில் இறங்கி சிறிது நேரம் கிரிக்கெட் விளையாடினார். இளைஞர்கள் அமைச்சருடன் படம் எடுத்துக்கொண்டனர்.

Similar News

News February 18, 2026

வறட்சியின் பிடியில் முதுமலை: வனத்துறை எச்சரிக்கை!

image

நீலகிரி மாவட்டம் முதுமலை மற்றும் மசினகுடி பகுதிகளில் வறட்சி நிலவுவதால் பசுமை இழந்து வருகிறது. இதனால் வனவிலங்குகளுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வன விலங்குகள் உணவுக்காக சாலையோரங்களில் நடமாடிக் கொண்டிருக்கின்றன. அவ்வப்போது சாலையை கடக்கும் நிகழ்வு நடைபெறுகிறது. காட்டு யானை உள்ளிட்ட விலங்குகளை செல்பி போன்ற புகைப்படங்களை எடுக்க வேண்டாம் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

News February 18, 2026

திருச்சி கொண்டு செல்லப்பட்ட ஊட்டி மலை ரயில்

image

நீலகிரி மாவட்டம் ஊட்டி மலை ரயிலுக்காக திருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனையில் 4 என்ஜின்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தயாரித்து அனுப்பப்பட்டன. அந்த என்ஜின்கள் மலை ரயிலில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.ஊட்டி மலை ரயில் என்ஜின் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுவது வழக்கம். அந்த வகையில் ஊட்டி மலை ரயில் என்ஜின் ஒன்று பராமரிப்பு பணிக்காக லாரியில் எடுத்துச் செல்லப்பட்டது.

error: Content is protected !!