News April 19, 2024
கிரிக்கெட் போட்டிக்கு அழைப்பு!

மதுரை மேலூர் அருகே அ.வல்லாளப்பட்டியில் வரும் மே 16ம் தேதி முதல் 19ம் தேதி வரை மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இதில் முதலிடம் பெரும் அணிக்கு ரூ.1 லட்சமும், 2ம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.70 ஆயிரமும், 3ம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.50 ஆயிரமும் பரிசு தொகையாக வழங்கப்பட உள்ளது. எனவே பங்கேற்க ஆர்வமுள்ள அணிகள் வரும் மே 8ம் தேதிக்குள் முன்பதிவு செய்துகொள்ள அறிவுறுத்தல்.
Similar News
News December 29, 2025
மதுரை: இது தெரியாம சிலிண்டர் வாங்காதீங்க!

மதுரை மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி உள்ளதோ அதே போன்று கேஸ் சிலிண்டர்களுக்கு காலாவதி உள்ளது. சிலிண்டர் காலாவதி மிகவும் ஆபத்தானது.
A – (Jan/Feb/Mar)
B – (Apr/May/Jun)
C – (Jul/Aug/Sep)
D – (Oct/Nov/Dec)
A – 26 என்றால் மார்ச் 2026 என்று அர்த்தம். இனிமே உங்க சிலிண்டரை சரிபார்த்து வாங்குங்க. காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இத அனைவரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!
News December 29, 2025
மதுரையில் ஜோதிடருக்கு பீர் பாட்டிலால் குத்து

மதுரை திருப்பாலையை சேர்ந்தவர் ஜோதிடர் மணிகண்டன்(35). அதே பகுதியை சேர்ந்த நண்பர்களுடன் விளையாடிய போது தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அதே பகுதியை சேர்ந்த மணிகண்ட பிரபு(24) பீர் பாட்டிலுடன் அவர் வீட்டிற்கு சென்று பாட்டிலை உடைத்து சரமாரியாக அவரை குத்தினார். திருப்பாலை போலீசார் மணிகண்ட பிரபுவை இன்று கைது செய்தனர்.
News December 29, 2025
மதுரை: சேலையில் தீப்பிடித்து மூதாட்டி உடல் கருகி பலி

பேரையூர் புளியம்பட்டியை சேர்ந்தவர் ராஜம்மாள்(75). தனித்து வசித்து வந்த இவர் வீட்டில் மண்ணெண்ணெய் விளக்கு ஏற்றிய போது எதிர்பாராமல் சேலையில் தீப்பற்றியது. இதில் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். இது குறித்து பேரையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


