News January 21, 2026
கிரிக்கெட் களத்தில் கால்பதிக்கும் உசைன் போல்ட்?

8 முறை ஒலிம்பிக் தங்கப்பதக்கம் வென்ற தடகள வீரர் உசைன் போல்ட் 2028 ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட் விளையாட விருப்பம் உள்ளதாக தெரிவித்துள்ளார். ஜமைக்காவை சேர்ந்த போல்ட் அணியில் இருந்து அழைப்பு வந்தால், உடனே தயாராகிவிடுவேன் என கூறி இருக்கிறார். சிறு வயதில் வேகப்பந்து வீச்சாளராக வேண்டும் என ஆசைப்பட்ட போல்ட், தற்போது உலகின் வேகமான ஓட்டப்பந்தய வீரராக உள்ளார். இப்போ அவர் எவ்வளோ ஸ்பீடில் பவுலிங் போடுவாரு?
Similar News
News March 28, 2026
இறந்தவரின் விரலை வைத்து போனை Unlock செய்யமுடியுமா?

இறந்தவரின் விரலை வைத்து அவரது ஃபோனை Unlock செய்யமுடியாது. Latest Model போன்களின் சென்சார்களில் Liveness Detection பயன்படுத்தப்படுகிறது. அதாவது, இது ஒரு நபர் போனை Unlock செய்யும்போது, அவரது விரலில் உள்ள ஈரப்பதம், ரத்த ஓட்டம், வெப்பநிலை ஆகியவற்றை ஆராய்கிறது. இறந்தவரின் உடலில் இது இருக்காது என்பதால், அவரது ஃபோனை Unlock செய்வது சிரமம் என்கின்றனர். 1% பேருக்கு மட்டுமே தெரிந்த இத்தகவலை SHARE பண்ணுங்க.
News March 28, 2026
பாமக தொகுதிகளில் நேரடியாக களமிறக்கும் ராமதாஸ்

பாமக போட்டியிடும் தொகுதிகளில் நேரடியாக போட்டியிட ராமதாஸ் தரப்பு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜி.கே.மணி மற்றும் ராமதாஸ் மகள் காந்திமதி இருவரும் தேர்தலில் போட்டியிடவில்லை என கூறப்படுகிறது. ஆனால், பாமக வலுவாக இருக்கும், தர்மபுரி, பென்னாகரம், ரிஷிவந்தியம், விக்கிரவாண்டி, சேலம் மேற்கு, சோளிங்கர் உள்ளிட்ட தொகுதிகளில் ஆதரவாளர்களை ராமதாஸ் களமிறக்க இருக்கிறாராம். <<-se>>#TNElection2026<<>>
News March 28, 2026
முதலில் விஜய்க்கு இது தெரிய வேண்டும்: மா.சு

தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதன் பின்னணியில் திமுக இருப்பதாக கூறிய <<19492698>>விஜய்க்கு <<>>மா.சு பதிலடி கொடுத்துள்ளார். தேர்தல் பிரசார அனுமதிக்கும், TN அரசிற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என கேள்வி எழுப்பிய அவர், பிரசாரத்திற்கு எப்படி அனுமதி பெறுவது என்பதை விஜய் தெரிந்துக் கொள்ள வேண்டும் என சாடினார். மேலும், இணைய வழியில் முறையாக விண்ணப்பித்தால், பிரசாரத்திற்கு ECI அனுமதி அளிப்பதாகவும் கூறினார். <<-se>>#TNElection2026<<>>


