News March 24, 2026
கிரிக்கெட்டர் ரிங்கு சிங்கிற்கு அரசு வேலை

அதிரடி வீரர் ரிங்கு சிங்கிற்கு அரசு வேலை வழங்குவதாக உ.பி., அரசு அறிவித்துள்ளது. இந்திய அணி டி20 WC வெல்ல சிறப்பான பங்களிப்பை அளித்ததை கெளரவிக்கும் விதமாக, ‘மண்டல விளையாட்டு அதிகாரி’ பதவிக்கு அவர் நியமிக்கப்பட்டுள்ளார். WC-ன் போது அவரது தந்தையின் புற்றுநோய் பாதிப்பு தீவிரமடைந்தது. அந்நிலையில், தந்தையையும் கவனித்து கொண்டு, அணிக்கான பங்களிப்பையும் அளித்து ரிங்கு ரிங் வெற்றிக்கு பங்களித்தார்.
Similar News
News March 30, 2026
தமிழக அரசுக்கு எதிராக போராடினோம்: பெ.சண்முகம்

ஊழலை ஒரு அளவீடாக கொண்டால், யாருடனுமே கூட்டணி சேர முடியாது என CPM-ன் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். அரசுத் துறைகளில் அரங்கேறிய ஊழலுக்கு எதிராக CPM போராட்டம் நடத்தியிருக்கிறது என்றும், கூட்டணியில் இருப்பதாலேயே அவர்கள்(திமுக) செய்யும் ஊழலுக்கு நாங்கள் பொறுப்பாக முடியாது எனவும் கூறினார். மேலும், திமுக அரசுக்கு எதிராக CPM போராடிய விஷயங்களை வைத்து பல புத்தகங்களை போடலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
News March 30, 2026
இந்தியாவை நோக்கி வரும் 94,000 மெட்ரிக் டன் LPG

பெட்ரோல் பங்க்குகளில் போதுமான அளவு பெட்ரோல், டீசல் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 94,000 மெட்ரிக் டன் LPG உடன் 2 கப்பல்கள் இந்தியாவை நோக்கி வந்து கொண்டிருப்பதாகவும், மார்ச்சில் 2.9 லட்சம் கேஸ் இணைப்புகள் வீடு & வணிக பயன்பாடு உள்ளிட்டவைக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது. எனவே, தட்டுப்பாடு நிலவுவதாக பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
News March 30, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அமைச்சியல் ▶அதிகாரம்: சொல்வன்மை
▶குறள் எண்: 648
▶குறள்: விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்.
▶பொருள்: வகைப்படுத்தியும், சுவையாகவும் கருத்துக்களைச் சொல்லும் வல்லமையுடையோர் சுட்டிக்காட்டும் பணியை, உலகத்தார் உடனடியாக நிறைவேற்ற முனைவார்கள்.


