News July 26, 2024
கிராம நிர்வாக அலுவலர்கள் தொடர் போராட்டம்

கடலூர் அருகே தொண்டமாநத்தம் விஏஓ ஜெயராமமூர்த்தியை பணியிடை நீக்கம் செய்ததை கண்டித்து தொடர் போராட்டத்தில் வி.ஏ.ஓ-க்கள் கடந்த 4 நாட்களாக தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து நேற்று இரவு மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதையடுத்து அடுத்த கட்ட போராட்டத்தை அறிவிக்க உள்ளதாக விஏஓ-க்கள் தெரிவித்து சென்றனர்.
Similar News
News March 6, 2026
கடலூர்: இனி வாட்ஸ்ஆப் மூலம் சான்றிதழ்கள்!

கடலூர் மக்களே பிறப்பு/இறப்பு சான்றிதழ், வருமான சான்று, பட்டா, சொத்துவரி, வேளான் திட்டங்கள், மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் மின்சாரக் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட அரசு சேவைகளை இனி வாட்ஸ்அப் மூலமாகவே எளிதாகப் பெறலாம். இதற்கு உங்களது வாட்ஸ்ஆப்பில் இருந்து ‘78452 52525’ என்ற எண்ணிற்கு ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும். இத்தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க!
News March 6, 2026
கடலூர்: விருப்ப மனு அளித்த அமைச்சர்!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஒஅலரும் மனு அளித்து வருகின்றனர், அவ்வகையில், திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினரும், தொழிலாளர் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சருமான சி.வே.கணேசன். சட்டமன்ற தேர்தலில் திட்டக்குடி தொகுதியில் திமுக சார்பில் மீண்டும் போட்டியிட, அறிவாலயத்தில் நேற்று (மார்.5) விருப்பம் மனுவினை அளித்தார். இதில், நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.ராஜேந்திரன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
News March 6, 2026
தந்தை இறந்த துக்கத்திலும் பொதுத்தேர்வு எழுதிய மாணவர்!

பண்ருட்டி பணிக்கன் குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன்(52). மூங்கில் படல் செய்யும் கூலி தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது ஒரே மகன் சுசீந்திரன் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தந்தை இறந்த துக்கத்திலும் நேற்று பொதுத்தேர்வு எழுதினார்.


