News March 19, 2025
கிராம சபை தேதி மாற்றம்

உலக தண்ணீர் தினத்தை ஒட்டி மார்ச் 22ம் தேதி கிராம சபை கூட்டம் நடக்க உள்ளதாக அரசு அறிவித்தது. அதன் பின் நிர்வாக காரணங்களுக்காக 23ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டது. நிர்வாக காரணங்களால், மார்ச் 23ம் தேதி நடக்க இருந்த கிராம சபை கூட்டத்தை, மார்ச் 29ம் தேதி நடத்த, ஊரக வளர்ச்சி துறை கமிஷனர் பொன்னையா ஊராட்சிகளின் உதவி இயக்குனர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News September 14, 2025
கோவை: மனைவியை கத்தியால் குத்திய கணவர்!

கோவை: கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கோபிநாத் , தனது மனைவி பிரியதர்ஷினி மீது நடத்தையில் சந்தேகம் கொண்டதாக கூறப்படுகிறது.இதன் காரணமாக, நேற்று இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த கோபிநாத், பிரியதர்ஷினியை கத்தியால் குத்தியுள்ளார். இதுகுறித்து கவுண்டம்பாளையம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, கோபிநாத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News September 13, 2025
கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (13.09.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 13, 2025
கோவை: ரூ.85,000 சம்பளத்தில் SBI வங்கியில் வேலை!

கோவை மக்களே, SBI பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 122 Specialist Officer பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு B.E. / B. Tech. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.85,920 முதல் ரூ.1,05,280 வரை வழங்கப்படும். இந்த பணிக்கு தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர், அக்.02ம் தேதிக்குள் இந்த <