News August 14, 2024
கிராம சபை கூட்டம் குறித்து புகார் அளிப்பது எப்படி ? (5/6)

உங்கள் ஊராட்சியில் இந்த நிமிடம் வரை கிராமசபை கூட்டம் குறித்த தகவல் தெரியவில்லை என்றாலும், கிராம சபை கூட்டம் நடக்கவில்லை என்றால் ஆட்சியருக்கு புகார் தெரிவிக்க உங்களுக்கு உரிமை உண்டு. முதல்வர் தனிப்பிரிவு – 1100, ஊராட்சி மணி – 155340, அரசின் தலைமை செயலாளர் – 044-25671555, ஊரக வளர்ச்சி துறை செயலகம் – 044-25665566, முதலமைச்சர் தனி பிரிவு – 044 25672283, 9443146857 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News July 5, 2025
சேலம் மாநகர இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் மாநகரில் இன்று (ஜூலை 05) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ளது. ஊரகம், சங்ககிரி, ஆத்தூர், மேட்டூர், வாழப்பாடி ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரை புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு மாநகர கட்டுப்பாட்டு எண்: 0427-2273100 அழைக்கலாம்.
News July 5, 2025
‘குற்றங்களுக்கு போதைப்பொருள் உபயோகமே காரணம்’

“சமுதாயத்தில் பெரும்பாலான குற்றங்களுக்கு போதைப்பொருள் உபயோகம் காரணமாக உள்ளது. வழக்கறிஞர்கள் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வாங்கித் தருவதுடன் கொடுமையான குற்றங்கள் மீண்டும் நடக்காமல் விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும்” என சேலம் மத்திய சட்டக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜோதிமணி பேசியுள்ளார்.
News July 5, 2025
எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு

அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு z + பாதுகாப்பை வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இபிஎஸ்க்கு ஏற்கனவே Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போழுது z + பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் முதல் இபிஎஸ் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.