News August 14, 2024
கிராம சபை கூட்டம் குறித்து புகார் அளிப்பது எப்படி ?

உங்கள் ஊராட்சியில் இந்த நிமிடம் வரை கிராமசபை கூட்டம் குறித்த தகவல் தெரியவில்லை என்றாலும், கிராம சபை கூட்டம் நடக்கவில்லை என்றால் ஆட்சியருக்கு புகார் தெரிவிக்க உங்களுக்கு உரிமை உண்டு. முதல்வர் தனிப்பிரிவு – 1100, ஊராட்சி மணி – 155340, அரசின் தலைமை செயலாளர் – 044-25671555, ஊரக வளர்ச்சி துறை செயலகம் – 044-25665566, முதலமைச்சர் தனி பிரிவு – 044 25672283, 9443146857 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News August 10, 2025
நாகை: பைக்கில் இருந்து தவறி விழுந்த பெண் பலி

நாகை, அய்யனார் சன்னதி பகுதியை சேர்ந்தவர் ஜெயஸ்ரீ(36).இவர் நேற்று (ஆக.9) தேதி தனது கணவர் அருண்குமார் உடன் பைக்கில் சன்னாநல்லூரில் இருந்து நாகை நோக்கி வந்துள்ளார். அப்போது வவ்வாலடி அரசு பள்ளி அருகில் வேகத்தடையில் ஏறி இறங்கிய போது தவறி விழுந்து ஜெயஸ்ரீக்கு தலையில் பலத்த காயமடைந்து உயிரிழந்தார். இது குறித்து திருக்கண்ணபுரம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News August 10, 2025
நாகை: வங்கியில் பணிபுரிய சூப்பர் வாய்ப்பு!

நாகை பட்டதாரி இளைஞர்களே வங்கி வேலைக்கு செல்ல ஒரு சூப்பர் வாய்ப்பு வந்துள்ளது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) 750 Apprentices பணியிடங்கள் நிரப்படவுள்ளது. இதற்கு ஏதேனும் பட்டப்படிப்பு முடித்தால் போதும். வயது வரம்பு 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.15,000 முதல் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News August 10, 2025
லைட்ஹவுஸ் பார்வை நேரம் மாற்றம்!

நாகை வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை லைட் ஹவுசில், தினமும் பார்வை பார்வை நேரம் மாலை 3.30 முதல் 5.30 மணி வரையாக இருந்தது. இந்நிலையில், அந்த நேரம் மாற்றப்பட்டு தினமும் காலை 10 முதல் மதியம் 1 மணி வரையிலும், மதியம் 2.30 முதல் மாலை 5.30 மணி வரையிலும் இனி பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திங்கள்கிழமை விடுமுறை என லைட் ஹவுஸ் நிர்வாகி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.