News August 14, 2024

கிராம சபை கூட்டத்தில் நீங்களும் தலைவராக முடியுமா? (6/6)

image

கிராம பஞ்சாயத்து தலைவரே கிராம சபை கூட்டதிற்கு தலைவர். அவர் இல்லாதபோது துணை தலைவர் கிராம சபையின் தலைவராக இருப்பார். துணைத் தலைவரும் இல்லாதபோது வார்டு உறுப்பினர்களில் யாரேனும் ஒருவர் தலைவராக செயல்படலாம். இவர்கள் யாரும் இல்லாத போது கிராம மக்கள் தேர்ந்தெடுக்கும் நபர் கிராம சபையின் தலைவராக இருப்பார். அவர் தலைமையில் தான் அன்றைய கிராம சபை கூட்டம் நடைபெறும். SHARE IT

Similar News

News October 22, 2025

தேனியில் ஒரே நாளில் 19 டன் குப்பைகள் அகற்றம்

image

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதிகளில் உள்ள அரண்மனை தெரு பாரஸ்ட் ரோடு கடைவீதி சுதந்திர வீதி புதிய பேருந்து நிலையம் அக்கிரகாரம் பெருமாள் கோவில் தெரு தெற்கு தெரு உள்ளிட்ட பகுதிகளில் அக்டோபர் 20ஆம் தேதி ஒரே நாளில் சுமார் 19 டன் குப்பைகள் சேர்ந்துள்ளனர். அதை பெரியகுளம் நகராட்சி நிர்வாகம் தூய்மை பணியாளர்களைக் கொண்டு அகற்றி உள்ளனர். என நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News October 22, 2025

தேனி: ரூ.1 லட்சம் சம்பளத்தில் பேங்க் வேலை

image

தேனி மக்களே BANK OF BARODA வங்கியில் காலியாக உள்ள ’50’ மேனேஜர், சீனியர் மேனேஜர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. ஏதேனும் ஒரு டிகிரி படித்து 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வழங்கப்படும். விரும்புவோர் <>bankofbaroda.bank.in க்ளிக் <<>>செய்து அக்.30-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.டிகரி படித்தவருக்கு SHARE பண்ணுங்க.

News October 22, 2025

தேனி: நண்பரை பார்க்க சென்ற இடத்தில் நேர்ந்த சோகம்

image

திண்டுக்கல், நிலக்கோட்டை தாலுகா, எழுவனம்பட்டி அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் அசோக்குமார் 30. தேவதானப்பட்டியில் தனது நண்பரை பார்ப்பதற்கு டூவீலரில் சென்றார். அட்டணம்பட்டி பிரிவு பைபாஸ் ரோடு பால்பண்ணை அருகே திரும்பும் போது, டூவீலர் மீது கார் மோதியது.பலத்த காயமடைந்த அசோக் குமார் பெரிய குளம் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதித்த டாக்டர் வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

error: Content is protected !!