News August 14, 2024
கிராம சபை கூட்டத்தில் ஆலோசிக்கப்படுவது எது?(4/6)

இதில் 2023-2024-ஆம் ஆண்டுக்கான தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீா் விநியோகத்தை உறுதி செய்வது, இணையவழி வரி செலுத்தும் முறை, தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல் ஜீவன் இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் முதலான 12 கூட்டப் பொருள்கள் குறித்து ஆலோசிக்கப்படும். காவல்துறையை சேர்ந்த அதிகாரிகள் கிராம சபை கூட்டம் நடப்பதை உறுதி செய்வார்கள்.
Similar News
News December 22, 2025
கரூரில் பெருகும் சூதாட்ட குற்றங்கள்!

கரூர் மாவட்டம், புலியூர் சுகாதார நிலையம் அருகே, s. கார்த்திக், மூவேந்தன், R. கார்த்திக் ஆகிய மூவரும் அப்பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இந்த தகவல் அறிந்த பசுபதிபாளையம் போலீசார் மூன்று நபர்களையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 52 சீட்டு அட்டைகள், 200 ரொக்க பணத்தை பறிமுதல் செய்தனர்.
News December 22, 2025
கரூரில் தட்டி தூக்கிய தவெகவினர்!

கரூர் கிழக்கு மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுக்கா ஆர்.புதுக்கோட்டை கிராமத்தில், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 80க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் கட்சியில் இணைந்தனர். இந்நிகழ்வில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணி, மேற்கு ஒன்றிய செயலாளர் முத்துக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
News December 21, 2025
கரூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வருகின்ற (டிசம்பர் 26) காலை 11 மணிக்கு, மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில் கலெக்டர் தங்கவேல் அறிவிப்பின் படி, மாவட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை நேரில் தெரிவிக்கலாம் அல்லது மனுக்களாக வழங்கலாம் என கூறப்பட்டுள்ளது.


