News August 14, 2024
கிராம சபை கூட்டத்தின் தீர்மான நகலை பெறுவது எப்படி? (2/6)

7 நாட்களுக்கு முன் தண்டோரா மூலம் கிராம மக்களுக்கு கிராம சபை கூட்டம் குறித்து தெரிவிக்க வேண்டும். ஊராட்சி தலைவர் தகவல்களை முன்கூட்டியே தெரிவிக்கவில்லை எனில் நடவடிக்கை எடுக்கப்படும். இதில் நிறைவேற்றப்படும் தீர்மானத்தின் நகலை கிராம மக்கள் கட்டணம் இல்லாமல் பெறமுடியும். உங்கள் பகுதியை தவிர்த்து மற்ற கிராம சபை கூட்டத்தில் நீங்கள் கலந்து கொள்ளலாம். அதில் நீங்கள் பார்வையாளராக மட்டுமே இருக்க முடியும்.
Similar News
News October 28, 2025
திருச்சி: உங்க Phone Missing-ஆ? கவலை வேண்டாம்

உங்கள் Phone காணாமல் போனாலோ? இல்ல திருடு போனாலோ பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News October 28, 2025
திருச்சி: வெளிமாநில தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்

மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த அமித்டே என்பவர் மணப்பாறை அருகே இயங்கி வரும் TNPL நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 21-ம் தேதி பணிமுடிந்து வெளியே சாப்பிட சென்றவர் மழைநீரில் வழுக்கி விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து மணப்பாறை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News October 28, 2025
திருச்சி: குறைதீர் கூட்டத்தில் 573 மனுக்களுக்கு தீர்வு

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில், முதியோர் உதவித்தொகை, விபத்து நிவாரணத் தொகை, விதவை உதவித்தொகை, தெரு விளக்கு, தண்ணீர் இணைப்பு மனுக்கள், தொகுப்பு வீடு மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பாக மொத்தம் 573 மனுக்கள் பெறப்பட்டு, அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.


