News August 13, 2025
கிராம சபைக் கூட்டம்- பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வரும் ஆக.15- ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு, நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி கேட்டுக் கொண்டுள்ளார். கிராம சபைக் கூட்டத்தில் கிராம ஊராட்சி, மற்றும் பொதுநிதி செலவினம் குறித்தும், கிராம ஊராட்சி தணிக்கை அறிக்கை குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.
Similar News
News August 13, 2025
JUST IN:சேலத்தில் மதுக்கடைகளை மூட உத்தரவு!

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட்.15ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக்கடைகள் மற்றும் மதுபானக் கூடங்களை தேதி மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அன்றைய தினம் உத்தரவுகளை மீறி விற்பனை செய்பவர்கள் மீது அரசு விதிகளின்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
News August 13, 2025
சேலம் மாநகர இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் மாநகரில் இன்று (ஆகஸ்ட் 13) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை, மாநகர காவல்துறை வெளியிட்டுள்ளது. சேலம் சரகம், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரை புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு மாநகர கட்டுப்பாட்டு எண்: 0427-2273100 அழைக்கலாம்.
News August 13, 2025
சேலம்: இலவச பட்டா பெற இதை மட்டும் செய்தால் போதும்!

சேலம் மக்களே ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.