News July 6, 2025
கிராம உதவியாளர் வேலை மதிப்பெண் விவரம்

சைக்கிள், பைக் ஓட்டுத் திறனுக்கு 10 மதிப்பெண்கள். வாசிப்பு மற்றும் எழுத தெரிந்தால் 30 மதிப்பெண்கள். வசிப்பிடம் சான்றிதழுக்கு 35 மதிப்பெண்கள். சம்பந்தப்பட்ட கிராமத்தில் அல்லது தாலுகாவிலாவது வசித்திருக்க வேண்டும். நேர்காணல் 15 மதிப்பெண்கள். வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர், தனி வட்டாட்சியர் நேர்காணல் நடத்துவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் கட்டாயம். ஷேர் பண்ணுங்க
Similar News
News July 6, 2025
தருமபுரிக்கு வருகை தந்த அமைச்சர்

தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நாளை (ஜூலை 7) காலை 9.00 மணிக்கு தருமபுரி கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டிடத்தை திறந்து வைக்கிறார். காலை 11 மணியளவில் தருமபுரி மாவட்ட பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறை சார்பில் புதிய கட்டிடங்களை திறந்து வைக்க உள்ளார்.
News July 6, 2025
குழந்தைகளுக்காக கூந்தல் தானம் வழங்கிய பள்ளி மாணவி

தருமபுரி சாலை விநாயகர் கோவில் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வரும் சஷ்மிதா ஸ்ரீ என்ற மாணவி புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்காக இன்று (ஜூலை 6) கூந்தல் தானம் செய்துள்ளார். இந்த நற்செயலை மேற்கொண்டதற்காக இவரையும் இவரது பெற்றோரையும் பலரும் பாராட்டி வருகின்றனர்.
News July 6, 2025
தர்மபுரி; உள்ளூரில் கிராம உதவியாளர் வேலை

2,299 கிராம உதவியாளர் (Village Assistant) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும், ரூ.11,100 – ரூ.35,100 வரை சம்பளம் வழங்கப்படும். செப்.2ஆம் தேதி தேர்வு நடைபெறும். விருப்பம் உள்ளவர்கள் வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு ( 04342-296188) தொடர்பு கொள்ளுங்கள். *10th முடித்த நண்பர்களுக்கு பகிருங்கள்* <<16962456>>தொடர்ச்சி<<>>