News July 10, 2025
கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு

ராணிப்பேட்டை மாவட்ட கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. https://ranipet.nic.in என்ற இணையதள முகவரியில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு வட்டத்திற்கான காலி பணியிட விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்குமாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் 06.08.2025. ஷேர் பண்ணுங்க.
Similar News
News July 10, 2025
பேருந்தில் மீதி சில்லறையை வாங்க வில்லையா? கவலை வேண்டாம்

பேருந்து பயணத்தில் ‘அப்றம் சில்லறையை வாங்கிக்கோங்கனு’ கன்டக்டர் சொன்ன நொடியில் இருந்து, மீதி சில்லறை கிடைக்குமோ கிடைக்காதோ என்ற பதற்றம் தொற்றிக்கொள்ளும். இனி அந்த கவலை வேண்டாம். ஒரு வேளை உங்களது மீது சில்லறையை வாங்காமல் இறங்கிவிட்டால் 18005991500-க்கு கால் பண்ணி உங்கள் டிக்கெட் விவரத்தை சொன்னால் போதும், உங்க காசை GPAY செய்து விடுவார்கள். மேலும் தகவலுக்கு (9445030523). எல்லாருக்கும் ஷேர் பண்ணுங்க!
News July 10, 2025
ராணிப்பேட்டையில் 800 பேர் கைது

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று பாரத மிகுமின் பெல் நிறுவனத்தின் நிறைவு வாயிலில் எதிராக கோரிக்கைகளை வலியுறுத்தி, தொழிலாளர் நல சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் முத்துக்கடை பேருந்து நிலையம், ஆற்காடு, கலவை, சோளிங்கர் உள்ளிட்ட இடங்களில் பல்வேறு தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. அந்த வகையில் மறியலில் ஈடுபட்ட 800 பேர் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
News July 10, 2025
ராணிப்பேட்டையில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் வீடு 2/2

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் சேர சொந்தமாக 350 ச.அடி நிலமும், பட்டாவும் இருக்க வேண்டும். சொந்தமாக கான்கிரீட் வீடு இருக்க கூடாது. குடிசை வீடு எனில் ஒரு பகுதி ஓடு/ கான்கீரிட்டாக இருக்க கூடாது. கிராமப்புறத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். அந்த நிலத்தை வணிக நோக்கில் பயன்படுத்தி வந்தால், விண்ணப்பிக்க இயலாது. சொந்த வீடு கனவை நனவாக்கும் சூப்பர் திட்டம் சீக்கிரம் அப்ளை பண்ணுங்க. அப்டியே ஷேர் பண்ணுங்க