News February 11, 2026
கிராம உதவியாளர் சங்கத்தினர் 3- வது நாளாக போராட்டம்

நாகை மாவட்டம், வேதாரண்யம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சிறப்பு கால முறை ஊதியத்தை மாற்றி, கால முறை உதியமாக வழங்க வேண்டும். அடிப்படை ஊதியம் ரூ.15,700 வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 3வது நாளாக கருப்பு பேட்ஜ் அணிந்து கொண்டு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Similar News
News February 13, 2026
நாகை: ரூ.5 லட்சம் காப்பீடு! APPLY NOW

மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் வருடத்திற்கு ரூ.5 லட்சம் வழங்கும் PM-JAY திட்டம் செயல்பட்டு வருகிறது. உங்கள் குடும்பத்தில் அவசர மருத்துவ தேவைக்கு பணம் பெற இனி அலைய தேவையில்லை. PM-JAY செயலியில் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பித்து அவசர கால மருத்துவ செலவை பூர்த்தி செய்யலாம். இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய <
News February 13, 2026
நாகயில் 273 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

கீழையூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட திருப்பூண்டி சாலையில் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் தலைமையில் போலீசார் வாகன சோதனை ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த சொகுசு காரை சோதனை செய்தில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரிய வந்தது. பின்னர் காரில் பயணித்த 3 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து 2.80 லட்சம் மதிப்பிலான 273 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
News February 13, 2026
நாகை அருகே சோகம்: ஏழ்மையால் பறிபோன உயிர்..

கீழ்வேளூர் போலீஸ் சரகம், திருக்கண்ணங்குடி சின்ன முக்கால் வட்டம் பகுதியை சேர்ந்தவர் ஹரிஹரன். மீன் லோடு ஏற்றும் வேலை பார்க்கும் இவர், தனது வீட்டில் கூரை போட பணம் இல்லாமல் குழந்தைகள் பனியில் தூங்குவதாக புலம்பி வந்துள்ளார். இதில் மனமுடைந்த ஹரிஹரன் தனது கூரை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பான புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


