News November 23, 2024
கிராமசபை கூட்டத்தில் பங்கேற்கும் அமைச்சர்

திண்டுக்கல், ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, பிள்ளையார்நத்தம் கிராமத்தில் இன்று (23.11.2024) காலை 11.00 மணி அளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் மொ.நா. பூங்கொடி, முன்னிலையில் நடைபெறவுள்ளது. இதனால் இச்சிறப்பு கிராம சபை கூட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி சிறப்பு பார்வையாளராக பங்கேற்க உள்ளார்.
Similar News
News August 16, 2025
போலி குறுஞ்செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம்!

அன்புள்ள SBI வாடிக்கையாளரே, “உங்கள் SBI நெட் பேங்கிங் இன்று தடை செய்யப்படும், தயவுசெய்து இங்கே இணைப்பை கிளிக் செய்யவும்” என்பது போன்ற போலியான குறுஞ்செய்திகளை நம்ப வேண்டாம் என்று திண்டுக்கல் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணம் திருடப்படலாம். இது போன்ற மோசடி குறித்து புகார் அளிக்க, சைபர் கிரைம் உதவி எண் 1930 புகார் அளிக்கலாம்.
News August 16, 2025
திண்டுக்கல்லில் இலவசம்: உடனே APPLY பண்ணுங்க!

திண்டுக்கல்லில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச Tally Certified Accountant with GST பயிற்சி வழங்கப்படவுள்ளது. 20 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், Tally தொடர்பாக அனைத்து நுட்பங்களும் கற்றுத்தரப்படவுள்ளது. இதில் பயிற்சி பெறுபவர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க இந்த <
News August 16, 2025
திண்டுக்கல்: செஸ் வீரர் பிரனேஷ்க்கு அமைச்சர் வாழ்த்து

திண்டுக்கல், சென்னையில் நடைபெற்ற செஸ் கிராண்ட்மாஸ்டர் தொடரில் சேலஞ்சர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாடு வீரர் பிரனேஷ் அவர்களுக்கு வாழ்த்துகள் தங்களின் அர்ப்பணிப்பு மற்றும் திறமை சதுரங்க உலகில் புதிய உயரங்களை எட்டும் பயணத்துக்கு வலுவான அடித்தளமாக அமைய எனது மனமார்ந்த வாழ்த்துகள் என ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சரும் ஆன அ.ர.சக்கரபாணி வாழ்த்தி உள்ளார்.