News August 3, 2024
கிரானைட் குவாரிகளில் டி.ஐ.ஜி., கலெக்டர் ஆய்வு

கிருஷ்ணகிரி மற்றும் பர்கூர் ஊராட்சிகளில் இயங்கி வரும் கிரானைட் மற்றும் கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்பட்ட இடங்களை சேலம் சரக காவல் துறை தலைவர் இ.எஸ். உமா மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு , மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் பெ.தங்கதுரை ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். மேலும், சட்ட விரோத கனிம கடத்தலில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் அபராதமும் விதிக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்தார்.
Similar News
News July 11, 2025
கிருஷ்ணகிரி: லஞ்சம் வாங்கிய அதிகாரி அதிரடி கைது

கிருஷ்ணகிரி, சூளகிரியை அடுத்த இனகபீரணப்பள்ளியை சோ்ந்த கதிரப்பாவிடம் உயா் அழுத்த மின் கம்பத்தை அமைக்க அத்திமுகம் உதவி பொறியாளா் உதயகுமார் ரூ.15,000 லஞ்சம் கேட்டுள்ளார். இதையடுத்து, நேற்று காலை கிருஷ்ணகிரி ஊழல் தடுப்பு பிரிவு போலீசாரின் அறிவுறுத்தலின்படி கதிரப்பா ரசாயனம் தடவிய பணத்தை கொடுத்து, உதயகுமார் கைது செய்யப்பட்டார். உங்களிடம் லஞ்சம் வாங்கினால் 04343- 292275-க்கு கால் பண்ணுங்க. ஷேர் பண்ணுங்க
News July 11, 2025
புகையிலை பெருட்கள் கடத்தியவர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய பகுதியில் ஜூஜூவாடி சோதனை சாவடியில் போலீசார் நேற்று (ஜூலை 9) வாகன சோதனை செய்தபோது, ரூ.1,42,656 மதிப்பிலான தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் ரூ.2,015 மதிப்பிலான மதுபானம் கண்டறியப்பட்டது. அவற்றை கடத்தி வந்த நபர் கைது செய்யப்பட்டு, பொருட்கள் மற்றும் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.
News July 10, 2025
கிருஷ்ணகிரி மாவட்டம் இன்று இரவு ரோந்து பணி விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (ஜூலை. 10) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவல்துறை அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அதிகாரிகளை அவசர காலத்திற்கு அழைக்கலாம் என தெரிவித்துள்ளனர். மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க.