News November 14, 2024

கிரகங்கள் தரும் நன்மைகள்

image

நவக்கிரகங்கள் என்று போற்றப்படும் ஒன்பது கிரகங்களும், நமக்கு ஒவ்வொரு விதத்தில் நன்மைகளை வழங்குகின்றன. நமது ஜாதகத்தில் எது வலிமை பெற்று யோகம் தருகிறது என்பதை அறிய வேண்டும். ➤சூரியன்: தலைமைப் பதவி ➤சந்திரன்: புகழ் ➤அங்காரகன்: வீரம் ➤புதன்: அறிவாற்றல் ➤வியாழன்: நன்மதிப்பு ➤சுக்கிரன்: அழகாற்றல் & அந்தஸ்து ➤சனி: மனப்பக்குவம் ➤ராகு: பகைவர் பயம் நீங்குதல் ➤கேது: குல அபிவிருத்தி.

Similar News

News August 10, 2025

ஆகஸ்ட் 10: வரலாற்றில் இன்று

image

*610 – முகம்மது நபி குர்ஆனை அளித்த நாள். 1741 – குளச்சல் போர்: திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மர் டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் படையினரைத் தோற்கடித்தார். *1916- தமிழ் எழுத்தாளரும், இதழாசிரியருமான சாவி பிறந்தநாள். *1948 –இந்திய அணுசக்திப் பேரவையை ஜவகர்லால் நேரு துவக்கி வைத்தார். *1990- நாசாவின் மெகலன் விண்கலம் வெள்ளி கோளை அடைந்தது.

News August 10, 2025

மீண்டும் அப்பாவான டென்னிஸ் லெஜெண்ட்

image

டென்னிஸ் லெஜண்ட் ரஃபேல் நடால் மீண்டும் தந்தையாகியுள்ளார். அவரது மனைவி மரியா ஃபிரான்ஸிஸ்கா பெரெல்லோவிற்கு கடந்த 7-ம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தைக்கு Miquel என பெயர் வைத்துள்ளனர். இது மரியாவின் காலமான தந்தையின் பெயராகும். அவரது நினைவாக குழந்தைக்கு இப்பெயர் வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2024-ல் டென்னிஸில் இருந்து ஓய்வு பெற்ற நடாலுக்கு, ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை உள்ளது.

News August 10, 2025

ஊழியர்களை பில்லியனர்கள் ஆக்கினேன்: Nvidia CEO

image

தனது நிறுவனத்தில் வேலை செய்யும் 42,000 ஊழியர்களின் சம்பளம், Comp. Off என அனைத்தையும் மதிப்பாய்வு செய்வதாக Nvidia CEO ஜென்சன் ஹுவாங் தெரிவித்துள்ளார். பரபரப்பான வேலைகளுக்கு மத்தியிலும் ஒவ்வொரு மாதமும் இதற்கென தனியாக நேரம் ஒதுக்குவதாகவும், வேறு எந்த நிறுவனத்தை விடவும் தனது நிர்வாக குழு ஊழியர்களை அதிகளவில் பில்லியனர்கள் ஆக்கியது நான் தான் என்றும் அவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!