News November 15, 2024

கிண்டி மருத்துவமனையில் இளைஞர் உயிரிழப்பு

image

சென்னை கிண்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இளைஞர் இன்று காலை உயிரிழந்தார். இதையடுத்து, உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பித்தப்பை கல் பிரச்சனையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெரும்பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் மரணம் அடைந்துள்ளார். மருத்துவர்கள் இல்லாததே விக்னேஷ் உயிரிழப்பிற்கு காரணம் என உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Similar News

News April 3, 2026

சென்னையில் சிலிண்டர் புக்கிங் இனி ரொம்ப ஈஸி!

image

சென்னையில் வீட்டு எரிவாயு சிலிண்டர் பதிவு செய்ய பல்வேறு வசதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வாட்ஸ்அப் மூலம் பதிவு செய்ய 7588888824 எண்ணை பயன்படுத்தலாம். செயலி மூலம் பதிவு செய்ய இந்தியன் ஆயில் செயலியை பயன்படுத்தலாம். எஸ்.எம்.எஸ் மூலம் 7718955555 எண்ணிற்கும், மிஸ்டு கால் மூலம் 8454955555 எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம். மேலும் பதிவு வசதி தினமும் காலை 10 – மாலை 6 மணி வரை வழங்கப்படுகிறது. ஷேர் பண்ணுங்க.

News April 3, 2026

சென்னை: பாலியல் தொழில் நடத்தியவர் கைது

image

சென்னை விபச்சார தடுப்புப் பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் நேற்று முன் தினம் காலை, பார்க் டவுன், வால்டாக்ஸ் ரோடு அருகிலுள்ள குழந்தை தெருவில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியை கண்காணித்தனர். அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்வது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து அதை நடத்திய தங்கும் விடுதியின் மேலாளர் பார்க் டவுன் குழந்தை தெருவை சேர்ந்த வீரமணி (37) என்பவரை கைது செய்தனர்.

News April 2, 2026

சென்னை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

சென்னை மாவட்டத்தில் இன்று (02.04.2026) இரவு 10 மணி முதல் நாளை (03.04.2026) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!