News April 18, 2025
கிணற்றில் விழுந்த நாய் உயிருடன் மீட்பு

காஞ்சிபுரம் மாவட்டம் காமராஜர் வீதி பின்புறம் உள்ள சேக்குபேட்டை பகுதியில், பயன்பாட்டில் இல்லாத 50 அடி ஆழம் கொண்ட தண்ணீர் இல்லாத பாழடைந்த கிணறு ஒன்று உள்ளது. சுற்றுச்சுவர் இல்லாத இந்த கிணற்றில், நேற்று (ஏப்ரல் 17) மாலை அங்கு சுற்றித்திரிந்த நாய் ஒன்று தவறுதலாக விழுந்துவிட்டது. தகவலறிந்து வந்த காஞ்சிபுரம் தீயணைப்பு துறையினர், அரை மணி நேரம் போராடி நாயை உயிருடன் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
Similar News
News July 11, 2025
சித்தியை கொடூரமாக வெட்டி கொலை

காஞ்சிபுரம் மாவட்டம் வையாவூர் அடுத்த நல்லூரில் சமாதானம் செய்வதற்காக சென்ற சித்தியை கொடூரமாக கொலை செய்த சம்பவம் மாவட்டத்தையே உலுக்கியுள்ளது. அண்ணன் – தம்பி இடையிலான இடப்பிரச்சனையில், சித்தி சுமதி சமாதானம் செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது, ஆத்திரமடைந்த மகன் உறவு கொண்ட துரை என்பவர் சுமதியின் தலையில் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News July 11, 2025
கிராம உதவியாளர் பணிகளுக்கான விண்ணப்பம்

திருப்பெரும்புதூர் வட்டத்தில் காலியாக உள்ள 8 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை திருப்பெரும்புதூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு காஞ்சிபுரம் டாட் என்ஐசி டாட் இன் என்ற இணையதளத்தை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News July 10, 2025
காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (10.07.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.