News April 28, 2025
கிணற்றில் மூழ்கி சிறுவன் பலி

திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அடுத்த கெங்காபுரத்தை சேர்ந்தவர் மதி (17) பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ளார். இந்நிலையில் தனது நண்பர்களுடன் ராமச்சந்திரபுரத்திலுள்ள விவசாய கிணற்றில் குளிக்க சென்ற மதி நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி மாயமானார். தகவலறிந்த ஆம்பூர் தீயணைப்பு வீரர்கள் மதியை சடலமாக மீட்டனர். பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News December 30, 2025
திருப்பத்தூர்: கிணற்றில் கிடந்த சடலம்!

ஆதியூர் அடுத்த விநாயகபுரத்தைச் சேர்ந்தவர் மணி. இவரது மனைவி கவுரவம்மாள்(70). இவர் கடந்த 3 நாட்களுக்கு முன் மாயமானார். அவரைப் பல்வேறு இடங்களில் அவர்களின் குடும்பத்தினர் தேடி வந்தனர். இந்நிலையில், மட்றப்பள்ளி செல்லும் சாலையில் உள்ள ஒரு கிணற்றில் சடலமாகக் கிடந்த கவுரவம்மாளை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News December 29, 2025
இரவு ரோந்து பணி காவல் அதிகாரிகளின் விவரங்கள்

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையின் சார்பில் இன்று டிசம்பர் 29 வந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இன்று இரவு பொதுமக்கள் தங்களுக்கு ஏற்படும் இன்னல்கள் தனியாக செல்லும் பொதுமக்கள் இந்த அலைபேசி எண்களை பயன்படுத்தி தங்களை தற்காத்துக் கொள்ள காவல்துறையின் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது. உடனே இந்த நம்பரை சேவ் பண்ணிக்கோங்க !
News December 29, 2025
திருப்பத்தூர்: 10th போதும், நல்ல சம்பளத்தில் கான்ஸ்டபிள் வேலை!

1. SSC கான்ஸ்டபிள் வேளைக்கு மொத்தம் 25,484 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2. கல்வி தகுதி: 10th, டிகிரி முடித்திருந்தால் போதும்.
3. மாத சம்பளம் ரூ.21,700 முதல் ரூ.69,100 வழங்கப்படும்.
4. விருப்பமுள்ளவர்கள் இங்கே <
5. கடைசி தேதி: டிச.31. அருமையான வாய்ப்பு, மிஸ் பண்ணிடாதீங்க. ஷேர் செய்யவும்.


