News January 21, 2025
கிணற்றில் மிதந்த பச்சிளம் குழந்தை மீட்பு

பள்ளிகொண்டா அடுத்த ஒதியத்தூர் ராஜபுரம் மாரியம்மன் கோயில் தெருவில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் இன்று (ஜனவரி 21) பச்சிளம் ஆண் குழந்தை சடலம் மிதந்துள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் பள்ளிகொண்டா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பொதுமக்கள் உதவியுடன் கிணற்றில் மிதந்த ஆண் குழந்தையின் சடலத்தை மீட்டனர். மேலும் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News March 9, 2026
வேலூர் மாவட்டம்- ஓர் பார்வை!

1.மாநகராட்சி: 1(வேலூர்)
2.நகராட்சி- 2 (குடியாத்தம்,பேரணாம்பட்டு)
3.பேரூராட்சிகள்- 4
4.வருவாய் கோட்டம்- 2
5.வருவாய் வட்டங்கள் – 06
6.வருவாய் கிராமங்கள்- 317
7.ஊராட்சி ஒன்றியம்- 07
8.கிராம பஞ்சாயத்து- 247
9.MP தொகுதி – 1 (வேலூர்)
10.MLA தொகுதி- காட்பாடி, வேலூர், அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம்)
11.மொத்த பரப்பளவு – 1336.42 ச.கி.மீ
இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்து கொள்ள SHARE பண்ணுங்க!
News March 9, 2026
வேலூரில் அரசியல் களம் காணும் தவெக!

வேலூர் இன்பென்டரி சாலையில் தமிழக வெற்றிக்கழக அலுவலக திறப்பு விழா நேற்று நடந்தது. இந்த விழாவுக்கு மாவட்ட இணைச் செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கி குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார். இதில் மாணவரணி இணை அமைப்பாளர் மணிகண்டன், ஐ.டி.விங்க் ஒருங்கிணைப்பாளர் நவீன், வாசு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அருணா, பேபி லக்ஷ்மி, கவுசல்யா, தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
News March 9, 2026
வேலூர்: வசமாகச் சிக்கிய பைக் திருடர்கள்!

வேலூர் மாவட்டம் ஓட்டேரி சந்திப்பில் பாகாயம் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் தொரப்பாடி சேர்ந்த பிரபு (43), சாய்நாதபுரம் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (51) என்பதும், அவர்கள் ஓட்டி வந்தது திருட்டு பைக் என தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார், பைக்கை பறிமுதல் செய்தனர்.


