News April 13, 2025
கிணற்றில் மிதக்கும் வாலிபர் சடலம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் செங்குறிச்சி கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் இன்று ஏப்ரல் 13-ஆம் தேதி, காலை சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் சடலம் மிதப்பதாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் விவசாய கிணற்றில் மிதக்கும் வாலிபர் சடலத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News April 16, 2025
NLC நிறுவனத்தில் வேலை

NLC நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Overman & Mining Sirdar பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 171 காலி பணியிடங்கள் உள்ளன. டிப்ளமோ, இன்ஜினியரிங் படித்தவர்களிடம் இருந்து விண்ணப்பிக்கலாம். Junior Overman பணிக்கு ஆண்டுக்கு ரூ. 8.53 லட்சமும், Mining Sirdar பணிக்கு ஆண்டுக்கு ரூ. 7.16 லட்சம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். மேலும் அறிய இங்கு க்ளிக் செய்யவும். SHARE பண்ணுங்க
News April 16, 2025
ஜாக்கிரதை! ஒரு க்ளிக் உங்கள் வாழ்க்கையை மாற்றலாம்!

அறிமுகம் இல்லாத எண்களில் இருந்து வரும் குறுஞ்செய்திகளை நம்பி, அவற்றில் உள்ள எந்தவொரு இணையதள இணைப்பையும் (லிங்க்) கிளிக் செய்ய வேண்டாம். அவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கி சார்ந்த தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளது. சைபர் குற்றங்கள் குறித்து புகார் அளிக்க, 1930 என்ற எண்ணை அழையுங்கள். இது குறித்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.
News April 16, 2025
கள்ளக்குறிச்சி: புதிய விதிமுறையால் ஏமாற்றம்

கள்ளக்குறிச்சியில் அரசு போக்குவரத்துக் கழகங்களில் 25 மண்டலங்களில் காலியாக உள்ள 3,274 டிரைவர், கண்டெக்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் வெளியானது. தற்போது புதிய விதிமுறையால் டிரைவர், கண்டெக்டர் பணிக்கு தனி, தனியாக விண்ணப்பிக்க முடியாது. இரண்டு லைசென்ஸ்களும் வைத்திருக்கும் நபர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்பதால் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளதக கூறுகின்றனர்.