News April 11, 2025

கிணற்றில் தவறி விழுந்தவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

image

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே பழவேரி கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் (39), குழந்தையின்மை காரணமாக மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் ஆழ்ந்த யோசனையில் பொதுக் கிணற்றின் சுற்றுச்சுவரில் உட்கார்ந்திருந்த போது தவறி விழுந்து, நீரில் மூழ்கி நேற்று (ஏப்.10) உயிரிழந்தார். தகவல் அறிந்த தெள்ளார் போலீசார் அவரது சடலத்தை கைப்பற்றி, வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Similar News

News January 26, 2026

தி.மலை: GH-ல் இவை எல்லாம் இலவசம்!

image

தி.மலை அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்
1. இலவச மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அவசர அம்புலன்ஸ்
இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் திருவண்ணாமலை மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 04175-232474 தெரிவியுங்க. இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க.

News January 26, 2026

தி.மலையில் கரண்ட் கட் ?

image

தண்டராம்பட்டு துணை மின்நிலையத்தில் நாளை (ஜன.27) மாதாந்திர பராமரிப்பு பணி மற்றும் பழுது நீக்கும் பணிகள் மேற்கொள்ள உள்ளனர். இந்த பணி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தண்டராம்பட்டு, கொளமஞ்சனூர். நாளாள்பள்ளம், அமந்தபுத்தூர், தென்முடியனூர், நெல்லிக்குப்பம், ராதாபுரம், கீழ்வணக்கம்பாடி, அகரம், தாழனோடை, அல்லப்பனூர், சாத்தனூர் மேலும் பல பகுதிகளில் மின் தடை ஏற்பட உள்ளது.

News January 26, 2026

தி.மலை: கூலி தொழிலாளி கொடூர பலி!

image

ஆரணியை அடுத்த நெசல் புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கன்னியப்பன் மாடுகளை மேய்த்து கூலி வேலை செய்து வந்துள்ளார். நேற்று (ஜன.25) மாடுகள் மேய்த்து கொண்டிருக்க போது ஒரு மாடு கன்னியப்பனை முட்டியது இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதையடுத்து ஆரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து கன்னியப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

error: Content is protected !!