News October 14, 2025
கிட்னி புரோக்கர்கள் சேலம் சிறையில் அடைப்பு!

நாமக்கல்லில் வறுமையில் வாடும் தொழிலாளர்களை குறிவைத்து கிட்னி திருட்டு நடைபெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.விசாரணையில் பள்ளிபாளையம் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த ஸ்டாலின் மோகன் (48), ஆனந்தன் (45) ஆகிய இருவரும் கிட்னி விற்பனை செய்யும் இடைத்தரகர்களாக செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
Similar News
News October 14, 2025
சேலம் -விமானம் சேவை 26ம் தேதி முதல் நேரம் மாற்றம்

சேலம் காமலாபுரம் விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு இண்டிகோ விமான சேவையும், பெங்களூரு, ஐதராபாத் ஆகிய நகரங்களுக்கு அலையன்ஸ் ஏர் விமான சேவையும் உள்ளது. விமானங்களின் இயக்க நேரம் வரும் 26ம் தேதி முதல் குளிர்காலத்திற்கான இயக்க நேரமாக மாற்றி அமைப்பதாக சேலம் விமானநிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது. 26ம் தேதி முதல் சேலத்தில் பிற்பகல் 3.40 மணிக்கு புறப்பட்டு, சென்னைக்கு மாலை 4.55 மணிக்கு சென்றடையும்.
News October 14, 2025
சேலம்: இந்த சான்றிதழ்கள் உங்களிடம் இல்லையா?

உங்கள் 10th, 12th, Diploma Certificate தொலைந்தாலோ, கிழிந்தாலோ இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற முடியும். அதாவது <
News October 14, 2025
பெங்களூருவுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

தீபாவளி பண்டிகையையொட்டி தூத்துக்குடி, கொல்லத்திலிருந்து சேலம் வழியாக பெங்களூருவுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி, கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் பல்வேறு சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.அதன் ஒரு பகுதியாககேஎஸ்ஆர் பெங்களூரு-தூத்துக்குடி இடையே வரும் 17, 21 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும்.