News October 31, 2025
காஷ்மீர் துயரத்திற்கு காங். தான் காரணம்: மோடி

தேசிய ஒற்றுமை தின விழா, குஜராத்தில் நடைபெற்றது. இதில், <<18156617>>அணிவகுப்புக்கு<<>> பின் பேசிய PM மோடி, காஷ்மீரை முழுமையாக இந்தியாவுடன் இணைக்க வேண்டும் என்ற படேலின் கனவை காங்., மறந்து செயல்பட்டதே, காஷ்மீரின் துயரத்திற்கு காரணம் என குற்றஞ்சாட்டினார். பிரிவு 370-ஐ நீக்கியதால், காஷ்மீர் இன்று ஒன்றுபட்டுள்ளதாக கூறிய அவர், ஆபரேஷன் சிந்தூர் மூலம் பயங்கரவாதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.
Similar News
News October 31, 2025
கலப்பட டீ தூளை கண்டறிவது எப்படி?

கலப்பட டீ தூள் பயன்படுத்தினால், உடலுக்கு தீங்கு உண்டாகும் என்று டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். ஆகையால், டீ குடிக்க பயன்படுத்தும் தூள் நல்லதா என தெரிந்து கொள்ளுங்கள். *தண்ணீரில் டீ தூள் போட்டு சிறிது நேரத்திற்கு அப்படியே விடுங்கள், அதன் நிறம் மாறவில்லை எனில் அது ஒரிஜினல். *வெள்ளை நிற பேப்பரில் டீ தூள் போட்டு அதில் 2 சொட்டு தண்ணீர் ஊற்றவும், பேப்பரின் நிறம் மாறினால் அது போலி டீ தூள் ஆகும்.
News October 31, 2025
ஜெமிமா எனும் ஸ்டார்.. அன்றே கணித்த பிரபலம்

ஜெமிமா ரோட்ரிக்ஸ் குறித்து 7 ஆண்டுகளுக்கு முன்பாக இங்கிலாந்து EX வீரர் நாசர் ஹூசைன் பதிவிட்ட ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது. இந்தியாவுக்கு வந்த போது ஜெமிமாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்ட நாசர் ஹூசைன், அவருக்கு சில பந்துகளை வீசியதாக கூறியுள்ளார். அவர் எதிர்காலத்தில் இந்திய அணியின் ஸ்டாராக உருவெடுப்பார் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். அவர் சொன்னது போலவே தற்போது நடந்துள்ளது.
News October 31, 2025
பிரபல நடிகர் தர்மேந்திரா ஹாஸ்பிடலில் அனுமதி

பாலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக இருந்த பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா(89) மும்பையில் உள்ள ஹாஸ்பிடலில் அட்மிட்டாகியுள்ளார். அவருக்கு எந்தவித உடல்நலப் பிரச்னைகளும் இல்லை என குடும்பத்தினர் விளக்கம் அளித்துள்ளனர். வயது முதிர்வு காரணமாக, சில பரிசோதனைகளை மேற்கொள்வதற்காகவே தர்மேந்திராவை ஹாஸ்பிடலில் சேர்த்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் நடிகை ஹேம மாலினியின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.


