News June 4, 2024
காஷ்மீரின் அரசியலைத் தீர்மானிக்கும் தேர்தல்? (2/3)

காஷ்மீர் & லடாக்கில் உள்ள 5 தொகுதிகளில் உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி, சஜத் லோன் ஆகிய 3 முன்னாள் முதல்வர்கள் உள்ளிட்ட 66 பேர் போட்டியிட்டுள்ளனர். 5 கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்த அங்கு தற்போது 3 அடுக்கு பாதுகாப்புடன் இன்று வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்று வருகிறது. வன்முறை சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.
Similar News
News September 21, 2025
ஆயுதபூஜை விடுமுறை.. நாளை முதல் ஸ்பெஷல் அறிவிப்பு

ஆயுதபூஜை, தீபாவளியையொட்டி சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னை சென்ட்ரல் – குமரி இடையே நாளை(செப்.22), 29, அக்.6, 13-லிலும், மறுமார்க்கத்தில் செப்.23, 30, அக்.7, 14, 21-லிலும் இயக்கப்படும். அதேபோல், நெல்லை – செங்கல்பட்டு இடையே, செப்.26, 28, அக்.3, 5, 10, 12, 17, 19, 24, 26-லிலும், மறுமார்க்கத்தில் செப்.26, 28, அக். 3, 5, 10, 12, 17, 19, 24, 26-லிலும் ரயில் சேவை இயக்கப்பட உள்ளது. SHARE IT.
News September 21, 2025
கல்வியில் அரசியலை திணிக்க வேண்டாம்: தர்மேந்திர பிரதான்

தமிழக அரசு, தனது அரசியல் நிலைப்பட்டை மாணவர்களின் கல்வியின் மீது திணிக்கக்கூடாது என்று தர்மேந்திர பிரதான் வலியுறுத்தியுள்ளார். தமிழக பள்ளிகளில் ஏற்கெனவே தமிழ், ஆங்கிலம், தெலுங்கு மொழிகள் கற்பிக்கப்படுகின்றன; வேறு மொழிகளை திணிக்கவில்லை என்றும், RTE விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில் அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்க தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.
News September 21, 2025
Fees கட்டமுடியலையா? ₹20 லட்சம் வரை Scholarship!

பள்ளி, இளங்கலை, முதுகலை, மருத்துவம், IIT, IIM & வெளிநாட்டில் உயர்கல்வி பயில்பவர்களுக்கு ₹15,000 – ₹20 லட்சம் வரை Platinum Jubilee Asha Scholarship வழங்குகிறது SBI. இதற்கு, பள்ளி மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ₹3 லட்சம், மற்ற மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ₹6 லட்சத்துக்கு மிகாமலும் இருக்க வேண்டும். <