News July 30, 2024

காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

image

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று இரவுக்குள் முழு கொள்ளளவான 120 அடியை எட்டவுள்ளது . இந்த சூழலில், அணையின் 16 கண் மதகு பாலம் வழியாக 75,000 முதல் 1.25 லட்சம் கனஅடி வரை தண்ணீர் திறக்க வாய்ப்பிருப்பதால் காவிரி கரையோரங்களில் உள்ள சேலம் உள்ளிட்ட 11 மாவட்ட ஆட்சியர்களுக்கு மேட்டூர் அணையின் செயற்பொறியாளர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Similar News

News November 10, 2025

கோவில் நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்;பாஜக எச்சரிக்கை!

image

சேலம் மாநகர மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சுற்றுச்சூழல் பிரிவின் சார்பில் இந்து சமய அறநிலை துறை உதவி ஆணையாளருக்கு புகார் தெரிவித்துள்ளனர். அதில் சுகவனேஸ்வரர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய கட்டணம் வாங்கிக் கொண்டு அர்த்த மண்டபத்திற்கு பக்தர்கள் அனுமதிப்பதாகவும் இலவச தரிசனத்திற்கு உள்ளே விடுவதில்லை என்றும் இதனை உடனடியாக மாற்றாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் தெரிவித்துள்ளனர்.

News November 10, 2025

பயணியர் நிழற்கூடம்: திறந்து வைத்த மெக்கானிக்!

image

சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, அழகாபுரம் காவல் நிலையம் அருகே அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான, பேருந்து பயணிகளுக்கான நிழல் கூடம், இன்று மேற்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ அருள், அப்பகுதியை சேர்ந்த கார் மெக்கானிக் ஒருவரை வைத்து, பேருந்து நிழற் கூடத்தை திறந்து வைத்தார். எம்எல்ஏவின் இந்த செயலை கண்டு அப்பகுதி மக்கள் எம்எல்ஏவை பாராட்டினர்.

News November 10, 2025

ஏற்காட்டில் தங்கும் விடுதியில் விபரீத முடிவு!

image

காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் முருகேஷ் குமார் (21). இவர் நேற்று ஏற்காடு பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கியுள்ளார். நீண்ட நேரமாக கதவை திறக்கவில்லை என ஊழியர்கள் சென்று பார்த்த போது, விடுதியில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து ஏற்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!