News July 24, 2024
காவிரி – அமராவதி ஆற்றிலிருந்து தண்ணீர் கொண்டுவர ஆய்வு

காவிரி, அமராவதி ஆறுகள் இணையும் இடத்திலிருந்து 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள 6 குளங்களுக்கு குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்ல ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கி ஆய்வு செய்ய தமிழக அரசு அரசாணை வெளியிட்டதாக உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். பழநி சுற்றுவட்டார பகுதியில் உள்ள 110 பயனாளிகளுக்கு ரூ.10 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்னர் இதை பேசினார்.
Similar News
News March 4, 2026
திண்டுக்கல்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.03) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தாங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News March 3, 2026
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை இணையதளம் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அனுமதியில்லாத லோன் ஆப்கள் மூலம் கடன் பெற வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இவ்வகை செயலிகள் தனிப்பட்ட தகவல்களை தவறாக பயன்படுத்தும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடன் பெற விரும்புவோர் அரசு அங்கீகாரம் பெற்ற வங்கிகளை அணுகி பாதுகாப்பாக கடன் பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News March 3, 2026
திண்டுக்கல்: வீட்டு, குடிநீர் வரி கட்டுபவர்கள் கவனத்திற்கு!

திண்டுக்கல் மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகை மற்றும் வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். வீட்டிலிருந்தே <


