News February 17, 2025
காவல் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த கார்

பழனிசெட்டிபட்டி ஸ்டேஷன் வளாகத்தில் வாகனங்கள் நிறுத்த இடம் இல்லாததால் முல்லைப்பெரியாறு செல்லும் ரோடு, சுற்றியுள்ள இடங்களில் பறிமுதல் டூவீலர்கள், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் போலீஸ் ஸ்டேஷன் அருகே நிறுத்தப்பட்டிருந்த திருட்டு வழக்கில் தொடர்புடைய கார் ஒன்று நேற்று முன்தினம் (பிப்.15) திடீரென தீப்பற்றி எரிந்தது. தீயை அணைத்த நிலையில் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
Similar News
News March 7, 2026
தேனியில் பாலியல் தொழில்; 2 பெண்கள் மீட்பு

தேனி பாரஸ்ட் ரோட்டில் 54 வயது தொழிலாளியை அணுகிய 3 பேர், பணம் கொடுத்தால் பெண்களுடன் இருக்கலாம் என கூறி அருகிலுள்ள வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். இதுகுறித்து அவர் தேனி போலீசில் புகார் அளித்தார். சோதனையில் கர்நாடகம், ஆண்டிப்பட்டியை சேர்ந்த 41, 30 வயது பெண்கள் மீட்கப்பட்டனர். (உத்தமபாளையம்) காதர் மைதீன், (விருதுநகர்) சீனிவாசன் கைது செய்யப்பட்டனர்; மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
News March 7, 2026
தேனி: டாஸ்மாக் கடை ஷட்டரை உடைத்து திருட்டு

உத்தமபாளையம் பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில் சூப்பர்வைசராக குமரேசன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளார். மீண்டும் நேற்று(மார்ச்.5) கடையை திறக்க சென்ற பொழுது கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு உள்ளே இருந்த ரூ.12820 மதிப்பிலான 46 மது பாட்டில்கள் திருடப்பட்டது தெரியவந்தது. திருட்டு சம்பவம் குறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.
News March 6, 2026
தேனி: இந்த கார்டு இருந்தால் ரூ.5 லட்சம்!

தேனி மக்களே திடீரென மருத்துவ செலவு வந்தால் கையில் பணம் இல்லை என்ற கவலை இனி வேண்டாம். மத்திய அரசின் சுகாதார காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் Ayushman Card இருந்தால் அரசு மற்றும் சில தனியார் மருத்துவமனையில் இலவசமாக தரமான மருத்துவத்தை பெறலாம். அதன்மூலம் ஒரு குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வரை வழங்கப்படும். Ayushman Cardஐ பெற இப்போதே <


