News May 10, 2024
காவல் நிலையத்திற்கு சென்ற மூதாட்டி உயிரிழப்பு

செங்கம் அடுத்த இறையூர் பகுதியை சேர்ந்த 75 வயது கம்சலா என்னும் மூதாட்டி, அருகில் உள்ள விவசாய நில உரிமையாளர் போபிக்கும் நிலத்தகராறு ஏற்பட்ட நிலையில் பாச்சல் காவல் நிலையத்தில் கம்சலாபுகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் நேற்று இருவரையும் அழைத்து விசாரணை செய்தபோது காவல் நிலையத்தில் கம்சலா மயங்கி விழுந்து உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News February 16, 2026
தி.மலை அருகே மாணவர்கள் துடித்து துடித்து பலி

தி.மலை மாவட்டம் வந்தவாசி அருகே வீடி இடிந்து விழுந்ததில் அபினேஷ் மற்றும் முகேஷ் ஆகிய இரு சகோதரர்கள் உயிரிழந்தனர். இளங்காட்டில் உள்ள தாத்தா வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது தாத்தாவின் வீட்டு சீரமைக்கப்பட்டு வந்த நிலையில், எதிர்பாராத விதமாக இரு சகோதர்கள் மீது சுவர்கள் இடி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
News February 16, 2026
தி.மலை மாணவிக்கு நேர்ந்த கொடூரம்!

தி.மலையை சேர்ந்த 14 வயது சிறுமி பெற்றோரின் உறவினர் வீட்டில் தங்கி குடியாத்தத்தில் உள்ள பள்ளியில் 9th படித்து வந்துள்ளார். பெற்றோரை பார்ப்பதற்காக தி.மலைக்கு வந்தபோது வயிற்றுவலியின் காரணமாக தி.மலை அரசு மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்ட நிலையில் பாலியல் தொல்லை கொடுத்திருப்பது தெரியவந்தது. விசாரணையில் குடியாத்தம் கமலேஷை (23) கைது செய்த நிலையில் தப்பி ஓட்டிவிட்டார். போலீசார் தேடி வருகின்றனர்
News February 16, 2026
தி.மலை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

தி.மலை மாவட்டத்தில் நேற்று (பிப்.15) இரவு முதல் இன்று (பிப்.16) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!


