News April 11, 2024

காவல் துறையினா் கொடி அணிவகுப்பு ஊா்வலம்

image

மக்களவைத் தோ்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க நாமக்கல் மாவட்ட காவல் துறை, வேலூா் உள்கோட்ட காவல் துறை சாா்பில் கொடி அணிவகுப்பு ஊா்வலம் பரமத்தி வேலூரில் நேற்று நடைபெற்றது. இந்த ஊா்வலத்தை பரமத்தி வேலூா் காவல் துணை கண்காணிப்பாளா் சங்கீதா தொடங்கி வைத்தாா். வேலூா் காவல் ஆய்வாளா் ரங்கசாமி, உதவி ஆய்வாளா்கள், காவலா்கள் அணிவகுப்பு ஊா்வலத்தில் கலந்துகொண்டனா்.

Similar News

News July 8, 2025

8-வது போதும்.. நாமக்கல்லில் இலவச பயிற்சி!

image

நாமக்கல் இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், வரும் ஜூலை 14-ம் தேதி முதல் இலவச போட்டோகிராபி மற்றும் வீடியோகிராபி பயிற்சி 30 நாட்கள் நடைபெற உள்ளது. பயிற்சி, சீருடை, உணவு, தேநீர் அனைத்தும் இலவசமாகவும், பயிற்சி முடிவில் மத்திய அரசு சான்றிதழும் வழங்கப்படும். பயிற்சியில் சேர 8வது படித்திருந்தால் போதும். மேலும் விபரங்களுக்கு 8825908170 தொடர்பு கொள்ளவும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News July 8, 2025

நாமக்கல் பகுதியில் மின் தடை ரத்து

image

நாமக்கல் துணை மின் நிலையத்தில் மாதாந்திர அத்தியாவசிய மின் பராமரிப்பு பணிகளில் நடைபெற உள்ளதால் நாளை (ஜூலை 9) மின் தடை அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில், நிர்வாக காரணங்களாக தற்போது மின்தடை அறிவிப்பு ரத்து செய்யப்பட்டது. எனவே, நாளை நாமக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் வழக்கம்போல் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 8, 2025

நாமக்கல்: ரயில் பயணிகளின் கவனத்திற்கு

image

நாமக்கல் வழியாக செல்லும் 20671/20672 மதுரை – பெங்களூரூ – மதுரை வந்தேபாரத் ரயிலில் நாளை(ஜூலை 9) முதல் வரும் திங்கள்கிழமை வரை
காலை 8: 30 மணிக்கு 20671 பெங்களூரூ வந்தே பாரத் ரயில், மாலை 5: 25 மணிக்கு 20672 மதுரை வந்தேபாரத் ரயில் இயக்கப்படவுள்ளன.

error: Content is protected !!