News June 26, 2024

காவல் கண்காணிப்பாளர் தலைமையில் கூட்டம்

image

விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா தலைமையில் பொதுமக்கள் மற்றும் காவலர்களின் வாராந்திர குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.இந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 16 புகார் மனுக்களும் காவலர்களிடமிருந்து 54 மனுக்களும் பெறப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள காவல் கண்காணிப்பாளர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Similar News

News March 1, 2026

இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

image

வீரசோழனை சேர்ந்த சிவகாமி நரிக்குடி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிய போது 2016-ம் ஆண்டு வீட்டிற்கு செல்லும்போது அரசு பஸ் மோதியதில் காயமடைந்தார். இழப்பீடு கோரி ஸ்ரீவி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் அவருக்கு அரசு போக்குவரத்து கழக நிர்வாகம் ரூ.30.68 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. இழப்பீடு தொகை வழங்காததால் அரசு பஸ்சை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.

News March 1, 2026

திருச்சுழி அமைச்சரின் தொகுதிக்கு கூட கொண்டு வரவில்லை – பேச்சு

image

மதுரையில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் மாநாட்டில் பாமக தலைவர் அன்புமணி பேசுகையில், 60 ஆண்டுகால கோரிகையான காவேரி, குண்டாறு திட்டத்திற்காக ரூ.14500 கோடி அறிவித்து எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டினார். அதில் 262 கிமீட்டரில் வெறும் 8 கிமீ மட்டுமே வாய்க்கால் வெட்டப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் தங்கம் தென்னரசின் தொகுதியில் உள்ள குண்டாறுக்கு கூட அந்த திட்டத்தை கொண்டுவர முடியவில்லை என்றார்.

News March 1, 2026

விருதுநகர்: 23 காலி பணியிடங்களை அறிவித்த ஆட்சியர்

image

விருதுநகர், சிவகாசி, இராஜபாளையம், ஸ்ரீவி, அருப்புக்கோட்டை, திருச்சுழி, நரிக்குடி, சாத்தூர், வெம்பக்கோட்டை, வத்ராப், காரியாபட்டி ஆகிய 11 வட்டாரங்களில் 23 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடம் பூர்த்தி செய்யப்பட உள்ளது. ஆர்வமுள்ள 35 வயதிற்குட்பட்டவர்கள் மார்ச்.6 க்குள் www.virudhunagar.nic.in மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!