News June 6, 2024
காவல் கண்காணிப்பாளர் தலைமையில் கூட்டம்

விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் மற்றும் காவலர்களின் வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 12 புகார் மனுக்களும் காவலர்களிடமிருந்து 16 மனுக்களும் பெறப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.
Similar News
News September 13, 2025
சிவகாசி: ஆன்லைன் பட்டாசு விற்பவர்களுக்கு எச்சரிக்கை

தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், இணையதளம் மூலம் பட்டாசு ஆர்டர் பெறுபவர்கள், விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. எனவே ஆன்லைன், இணையதளம் மூலமாக பட்டாசு ஆர்டர் பெறுவது, விற்பனை செய்பவர்கள் மீது உச்சநீதிமன்ற அவமதிப்பு வழக்கு, கிரிமினல் வழக்கு, கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
News September 13, 2025
விருதுநகர்: பட்டாசு ஆலைகளில் ஆய்வு தீவிரம்..!

தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் சிவகாசி பகுதியில் பட்டாசு உற்பத்தி பணிகள் தீவிரமடைந்துள்ளது. விதிமீறலை கண்காணித்து தடுக்க ஏற்கனவே 10க்கும் மேற்பட்ட ஆய்வு குழுக்கள் அமைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது கூடுதலாக மேலும் 6ஆய்வு குழுக்கள் நியமிக்கப்பட்டு ஆய்வு நடத்தி வருகின்றனர். இக்குழுவில் தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்ககம், காவல்துறை, வருவாய்த் துறை, தீயணைப்புத் துறையினா் இடம்பெற்றுள்ளனர்.
News September 13, 2025
விருதுநகர்: அனைத்து வரிகளும் இனி ஒரே LINK க்கில்..!

விருதுநகர் மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். <