News December 31, 2025
காவல் உதவி ஆய்வாளா்களாக 26 பேருக்கு பதவி உயா்வு

புதுச்சேரி காவல் துறையில் 26 பேருக்கு காவல் உதவி ஆய்வாளா்களாகப் பதவி உயா்வு அளித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, புதுச்சேரி உள்துறை சாா்பு செயலா் எம்.வி.ஹிரன் இதற்கான உத்தரவைப் நேற்று பிறப்பித்துள்ளாா். அதில், சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் 19.1.26-க்கு முன்பாக பதவி உயா்வுப் பணியில் சேர இப்போதுள்ள பதவியிலிருந்து விலக்கு ஆணையைப் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 2, 2026
“அரசியலை விட்டு விலகத் தயார்”-அமைச்சர் நமச்சிவாயம்

புதுச்சேரி கோரி மேட்டில் உள்ள காவலர் மைதானத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், “போலி மருந்து விவகாரத்தில் எனக்கு தொடர்பு இருந்தால் அரசியலை விட்டு விலகத் தயார். முன்னாள் முதல்வர் நாராயணசாமிக்கு தொடர்பு இருந்தால் அரசியலை விட்டு அவர் விலக தயாரா?.” என சவால் விடுத்தார். அப்போது டிஜிபி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
News January 2, 2026
புதுவை: இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

தென்மேற்கு வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதால், புதுச்சேரியில் உள்ள காரைக்கால் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இன்று மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி காரைக்கால் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (ஜன.2) மாலை வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!
News January 2, 2026
புதுவை: பொங்கல் பரிசு விநியோக தேதி அறிவிப்பு

புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களிலும் அரசு ஊழியர்கள் மற்றும் கௌரவ ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களைத் தவிர்த்து மொத்தம் 3.48 லட்சம் ரேஷன் அட்டைகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகள் ரேஷன் கடைகளின் வாயிலாக விநியோகம் செய்யப்படுகிறது. அந்த வகையில் அரசின் சார்பில், இந்த ஆண்டிற்கான பொங்கல் பொருட்கள் தொகுப்பு நாளை (ஜன.3) முதல் விநியோகம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


