News January 13, 2025
காவல் உதவி ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை

ஈரோடு நகர காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு நகர காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் சசிகுமார். இவர் அரச்சலூர் அருகே தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து உடலை கைப்பற்றிய அரச்சலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப பிரச்சனை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
Similar News
News February 6, 2026
ஈரோடு: போஸ்ட் ஆபீஸ் வேலை- தேர்வு கிடையாது!

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 28,740 (தமிழகத்தில் மட்டும்: 2,009)
3. வயது: 18-40
4. சம்பளம்: ரூ.10,000 – ரூ.29,380
5. கல்வித் தகுதி: 10th தேர்ச்சி
6.தேர்வு முறை: தேர்வு கிடையாது (மதிப்பெண் அடிப்படையில்)
7.மேலும் தகவலுக்கு: <
இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News February 6, 2026
சென்னிமலை முருகன் கோவில் மகா தரிசனம்

ஈரோடு மாவட்டத்தில் புகழ் பெற்ற திருத்தலமாக வழங்கக்கூடிய சென்னிமலை முருகன் கோவிலில் தைப்பூச தேரோட்ட விழாவில் முக்கிய விழாவான மகா தரிசன விழா நேற்றிரவு நடைபெற்றது. அதில் முருகப்பெருமான் வெள்ளி மயில் வாகனத்திலும் நடராஜ பெருமான் வெள்ளி விமானத்திலும் எழுந்தருளி, பஞ்சமூர்த்தி புறப்பாடு நடைபெற்றது. இதை தரிசிப்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் சென்னிமலையில் கூடினர்.