News December 20, 2025
காவல்துறை பறிமுதல் செய்த வாகனங்கள் ஏலம்

திருவாரூர் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மதுவிலக்கு மற்றும் கஞ்சா குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் ஏலம் வரும் 24-ம் தேதி புதன்கிழமை அன்று காலை 10 மணிக்கு திருவாரூர் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற உள்ளது. ஏலத்தில் பங்கேற்போர் 4 சக்கர வாகனத்திற்கு ரூ.2000, இருசக்கர வாகனத்திற்கு ரூ.1000 முன்பணம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
Similar News
News December 22, 2025
திருவாரூர் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய எண்கள்

திருவாரூர் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அரசு உதவி எண்கள்
மாவட்ட கட்டுப்பாட்டு அறை -1077,
விபத்து அவசர வாகன உதவி – 102,
குழந்தைகள் பாதுகாப்பு – 1098,
முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் – 1800 425 3993,
மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம் – 18004250111
இதனை பிறரும் தெரிந்து கொள்ள SHARE செய்யவும்….
News December 22, 2025
திருவாரூர்: இந்த தேதிகளை மறக்காதீர்கள்!

திருவாரூர் மாவட்டம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக, சிறப்பு முகாம் அட்டவணை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, டிசம்பர் 27 மற்றும் டிசம்பர் 28 சனி மற்றும் ஞாயிறு கிழமைகளிலும்; ஜனவரி 3 ஜனவரி 4 ஆகிய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளும் சிறப்பு முகாம் நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியரகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
News December 22, 2025
திருவாரூர்: ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை!

மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (DRDO) உள்ள 764 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. வயது: 18-28
3. சம்பளம்: ரூ.35,400 முதல் ரூ.1,12,400
4. கல்வித் தகுதி: DEGREE / ITI / DIPLOMA
5. கடைசி தேதி: 01.01.2026
6. மேலும் தகவலுக்கு: <
இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க….


