News August 30, 2024
காவல்துறை சார்பில் இரவு நேர உதவி எண்கள் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு நேர ரோந்து பணிக்காக காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப் பட்டுள்ளனர். எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அவசர காலத்திற்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் அவர்களை அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 14, 2025
தூத்துக்குடி: காவலரின் கணவரிடம் அரிவாளில் வெட்டி வழிப்பறி

தூத்துக்குடி, எட்டயபுரத்தை சேர்ந்த ஜேசுராஜ் (47) என்பவர் மனைவி தமிழ்ச்செல்வி விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக உள்ளார். இவரது கணவன் ஜேசுராஜ் நேற்று முன்தினம் இரவு எட்டயபுரத்தில் நடந்து வந்து கொண்டிருந்த போது 3 பேர் கொண்ட கும்பல் அவரை அரிவாளால் வெட்டி 2300 பணத்தை ஜிபே மூலம் பறித்து சென்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News September 14, 2025
தூத்துக்குடி: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000/- APPLY…!

டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முதல் இரண்டு குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு மூன்று தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு <
News September 14, 2025
தூத்துக்குடி: 558 வழக்குகளுக்கு தீர்வு

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சார்பு நீதிமன்றத்தில் நேற்று (செப்.13) நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் கோவில்பட்டி சார்பு நீதிமன்ற நீதிபதி மாரிக்காளை தலைமையில், மாவட்ட உரிமையியல் நீதிபதி கருப்பசாமி, குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள் (எண்.1) ஆனந்த், (எண்.2) மணிமேகலா ஆகியோர் முன்னிலையில்விபத்து வழக்கு, உரிமையியல் வழக்குகள், சிறு, குறு வழக்கு என 558 வழக்குகளுக்கு சமரசம் மூலம் தீர்வு காணபட்டது.