News April 18, 2024

காவல்துறையின் கட்டுப்பாட்டில் மதுரை!

image

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில், மதுரை மக்களவைத் தொகுதியில் சுமார் 15 லட்சம் பேர் வாக்களிக்க தயாராக உள்ளனர். மக்கள் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் மதுரை மாவட்டம் முழுவதும் 5500 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். எனவே மக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Similar News

News July 6, 2025

மதுரை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

image

மதுரை மாவட்டத்தில் இன்று (05.07.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News July 5, 2025

மதுரை – ராமேஸ்வரம் பயணிகள் ரயில் சேவையில் மாற்றம்

image

மின்மயமாக்கும் பணிக்காக, மதுரை – ராமேஸ்வரம் ரயில் சேவை ஜூலை 7 முதல் 31ஆம் தேதி வரை (சனி, ஞாயிறு மற்றும் ஜூலை 23, 24 தவிர) ரயில் சேவைகளில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில் எண் 56711 மதுரை-ராமேஸ்வரம், ராமநாதபுரம்-ராமேஸ்வரம் இடையே பகுதியளவு ரத்து. (06714) ராமேஸ்வரம்-மதுரை, ராமேஸ்வரம்-ராமநாதபுரம் இடையே ரத்து செய்யப்படுகிறது. பயணிகள் முன்னதாக திட்டமிடுமாறு வேண்டுகோள்.

News July 5, 2025

சரக்குகளை கையாளுவதில் மதுரை Airport சாதனை

image

மதுரை விமான நிலையம் 2024 அக்டோபர் முதல் டிசம்பர் வரை சரக்கு போக்குவரத்து வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. ஸ்பைஸ் ஜெட் தினமும் 1787 கிலோவையும், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஒரு விமானத்தில் 931 கிலோவையும் துபாய் மற்றும் கொழும்புக்கு ஏற்றுமதி செய்தது. புதிய ஒருங்கிணைந்த முனையம் (அக்டோபர் 2024 முதல்) மற்றும் குளிர்சாதனம் வசதி இதற்கு உதவியுள்ளன. இருப்பினும், BASA இல்லாததால் நேரடி சர்வதேச வழித்தடங்கள் குறைவு.

error: Content is protected !!