News January 9, 2025
காவல்துறைக்கு மதுரை எம்.பி கண்டனம்

மதுரை : வெங்கடேசன் எம்பி நேற்று வெளியிட்ட அறிக்கையில், “ஆயிரக் கணக்கான மக்கள் கூடிய டங்ஸ்டன் எதிர்ப்பு பேரணியில், DYFI மாவட்ட செயலாளர் தமிழரசனை மட்டும் வலுக்கட்டாயமாகத் தாக்கி, இழுத்துச் சென்று காவல் துறை காரில் ஏற்ற முயன்றது ஏன்? காவல் துறையின் இந்த அராஜக நடவடிக்கை கண்டனத்திற்குரியது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது தமிழக அரசுஉரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்” என்று கூறியுள்ளார்.
Similar News
News December 11, 2025
மதுரை: வாக்காளர்களே இன்றே கடைசி.. செக் பண்ணுங்க

தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் (SIR) நடைபெறுகிறது. இதில் வாக்காளர்கள் தங்கள் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை சரிபார்த்து சமர்ப்பிக்கின்றனர். இதற்கான காலக்கெடு இன்று (டிச.11) முடிவடைகிறது. ஆகவே வாக்காளர்கள் உடனடியாக SIR படிவங்களை நிரப்பி அருகில் உள்ள BLOக்களிடம் சமர்பித்திடுங்கள். உங்கள் பகுதி வாக்காளர் பட்டியலை பார்க்க இங்கு <
News December 11, 2025
மதுரை: வீடு புகுந்து 14 பவுன் தங்க நகை திருட்டு

மதுரை திலகர்திடல் பகுதியை சேர்ந்த ஜோதிமணி (60) பால் வியாபாரம் செய்து வருகிறார். அவர் அணிந்திருந்த 14 ½ பவுன் நகை, ரூ.3,000 த்தை பையில் போட்டு கட்டிலில் வைத்தபடி தூங்கி விட்டார். அதிகாலை வீட்டிற்குள் நுழைந்த மர்ம ஆசாமி நகையை திருடி கொண்டு தப்பினார். திலகர் திடல் போலீசார் வீடு புகுந்து திருடிய செல்லூரை சேர்ந்த அஜித்குமார் (22) என்பவரை இன்று கைது செய்துள்ளனர்.
News December 11, 2025
மதுரை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

மதுரை மாவட்டத்தில் இன்று (10.12.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


