News December 18, 2025
காவல்துறைக்கு நன்றி தெரிவித்தார் விஜய்

ஈரோடு மக்கள் சந்திப்பை பிரமாண்டமாகவும், பாதுகாப்புடனும் ஏற்பாடு செய்த செங்கோட்டையனுக்கும், போலீஸுக்கும் விஜய் நன்றி தெரிவித்துள்ளார். மக்களை சந்திக்க புறப்பட்டதில் இருந்தே பல தடைகள் தொடர்ந்து வருகின்றன. அதையெல்லாம் மக்களின் பேராதரவுடன் முறியடித்து வருகிறோம். அந்த வகையில், ஈரோட்டில் நடந்த சந்திப்பு, வாழ்நாளில் இதுவரை இல்லாத வகையில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 20, 2025
நானே CM-மாக தொடர்வேன்: சித்தராமையா

கர்நாடக CM-ஆக முதல் 2.5 ஆண்டுகள் சித்தராமையாவும், அடுத்த 2.5 ஆண்டுகள் DKS-ம் செயல்படுவர் என காங்., ஒப்பந்தம் செய்ததாக பேசப்பட்டது. இதுகுறித்து சட்டப்பேரவையில் எதிர்கட்சியினர் கேள்வி எழுப்ப, அப்படி எந்த ஒப்பந்தமும் போடப்படவில்லை என சித்தராமையா மறுத்துள்ளார். மேலும், காங்., மேலிடம் சொல்லும் வரை நானே CM-ஆக இருப்பேன் என்ற அவர், 2028-ல் மீண்டும் CM பதவியில் அமர்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.
News December 20, 2025
Data சீக்கிரம் காலியாகாது.. இத பண்ணுங்க!

இன்ஸ்டாவில் ரீல்ஸ் பார்த்துட்டு இருக்கப்போ, 50% DATA காலி என SMS வருதா? இந்த சீக்ரெட் செட்டிங்-ஐ On பண்ணா போதும் DATA குறைவா செலவாகும். ▶உங்களுடைய INSTA PROFILE-க்கு போங்க ▶அங்க Top Right-ல காட்டுற 3 லைன்ஸ க்ளிக் பண்ணி, DATA-னு தேடுங்க ▶DATA USAGE & MEDIA QUALITY-அ க்ளிக் பண்ணி DATA SAVER-அ ON பண்ணிக்கோங்க. அதான் இனி DATA கம்மியா செலவாகுமேன்னு, தொடர்ந்து ரீல்ஸ் பார்க்காதீங்க மக்களே. SHARE IT.
News December 20, 2025
எங்களிடமிருந்து முருகரை பிரிக்க முடியாது: சேகர்பாபு

CM ஸ்டாலினுக்கு, முருகன் துணையாக இருப்பதால் தான், திருப்பரங்குன்றம் விவகாரத்தை பாஜக பெரிதுப்படுத்துவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். மக்களை பிளவுப்படுத்த நினைக்கும் பாஜகவின் திட்டம் எடுபடாது என்று கூறிய அவர், மாநாடு நடத்தி முருகன் புகழுக்கு, மேலும் புகழ் சேர்த்தது திராவிட மாடல் ஆட்சி என்று குறிப்பிட்டார். எந்த சக்தியாலும் முருகரை தங்களிடமிருந்து பிரிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.


