News August 12, 2024
காவல்துறைக்கு சிவகாசி MLA வேண்டுகோள்

சிவகாசி சாட்சியாபுரம் மேம்பாலப்பணிகள் தொடங்க உள்ள நிலையில், கனரக வாகனங்கள், பேருந்துகளுக்கான மாற்றுப்பாதை வழித்தடங்களில் முறையாக இயக்குவது குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று(ஆக.,11) மாலை MLA அசோகன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிவகாசி DSP கலந்து கொண்ட நிலையில், மாற்றுப் பாதையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த தேவையான காவல்துறையினரை நியமிக்க MLA கேட்டுக் கொண்டுள்ளார்.
Similar News
News October 17, 2025
விருதுநகர்: அரசு திட்டங்கள் கிடைக்கலையா? இத பண்ணுங்க!

விருதுநகர் மக்களே உங்களுக்கு அரசு திட்டம் வந்து சேரலையா? கவலை வேண்டாம். தமிழக அரசு ‘நீங்கள் நலமா?’ என்ற தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அரசு திட்டங்கள் சென்றடையாதவர்கள், <
News October 17, 2025
சிவகாசி: பட்டாசுகள் பறிமுதல்

சிவகாசி பகுதியில் பாரைபட்டி கிராமத்தில் அட்டை பெட்டிகள் தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. இங்கு சட்டவிரோதமாக பட்டாசுகளுக்கு பயன்படுத்தப்படும் மிஷின் திரி தயாரிக்கப்பட்டதும், ரூ.4.20 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டதும் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து சிவகாசி போலீசார், சஞ்சீவ்பாபு, செல்வகுமார் பாண்டியன் ஆகியோர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
News October 17, 2025
விருதுநகர்: சிறுமிக்கு பாலியல் தொல்லை.. 20 ஆண்டுகள் சிறை

ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (19). இவர் 15 வயது மாணவியிடம் சமூக வலைதளம் மூலம் அறிமுகமாகி பழகி வந்தார். சிறுமிக்கு தாலி கட்டிய சதீஷ்குமார் கடந்த 2022-ம் ஆண்டு சென்னைக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை அளித்துள்ளார். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய விரைவு மகளிர் நீதிமன்ற நீதிபதி குற்றவாளி சதீஷ்குமாருக்கு 20 ஆண்டுகள் சிறை, ரூ.15,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.