News October 24, 2024

காவலாளி தாக்கப்பட்ட வழக்கு: 3 பேருக்கு நீதிமன்ற காவல்

image

மாமல்லபுரம் 5 ரத பகுதிக்கு ‘No Entry’இல் வந்த காரை தடுத்து நிறுத்திய காவலாளியை 3 பேர் சரமாரியாக தாக்கியுள்ளனர். ‘எங்களை உள்ளே போக விடமாட்டியா?’ என காவலாளியை நடுரோட்டிலேயே சரமாரியாக அடித்து உதைத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், தாக்கிய மூவரும் திருப்போரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து, 3 பேருக்கும் 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.

Similar News

News February 4, 2026

செங்கல்பட்டு: கேஸ் சிலிண்டர் இருக்கா? இது கட்டாயம்

image

செங்கல்பட்டு மக்களே எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் எல்பிஜி (LPG) கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், ஹெச்பிசி போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். வேறு எதேனும் உதவி தேவைப்பட்டால் 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். (கேஸ் சிலிண்டர் வைத்துள்ளோருக்கு SHARE பண்ணுங்க)

News February 4, 2026

செங்கல்பட்டு: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில்<> cmcell.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம்.
இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்க.

News February 4, 2026

செங்கல்பட்டில் அதிரடி மாற்றம்

image

செங்கல்பட்டு மாவட்ட, வருவாய் அலகில் செங்கல்பட்டு, வண்டலூர், திருப்போரூர், செய்யூர் உள்ளிட இடங்களில் பணியாற்றி வந்த 6 துணை வட்டாட்சியர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் சினேகா உத்தரவிட்டுள்ளார். அதன்படி கிருஷ்ணவேணி, முத்து, வெங்கடேசன், தேவன், ரேணுகாதேவி மற்றும் சரவணன் ஆகிய வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!