News May 24, 2024

காவலர் வீட்டில் நகை கொள்ளை

image

கன்னியாகுமரி, நாகர்கோவில் அடுத்த மறவன் குடியிருப்பு பகுதியில் உள்ள ஆயூதப்படை குடியிருப்பில் வசிக்கும் காவலர் சில்வான் என்பவரது வீட்டில் இன்று மூன்றரை பவுன் நகை கொள்ளை நடந்துள்ளது. இது குறித்து நேசமணி நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவலர்கள் மட்டுமே குடியிருக்கும் காவலர்கள் குடியிருப்பில் நகைகள் திருட்டு போன சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News March 29, 2026

குமரி மக்களே அரசு பஸ்சில் பிரச்சனையா?

image

குமரி மாவட்டத்தில் உங்கள் பகுதியில் இயக்கப்படும் அரசு பேருந்துகள் குறித்து புகார்/குறைகளை அரசு போக்குவரத்து கழகத்தில் புகார் தெரிவிக்கலாம். காலதாமதமாக வருவது, நிற்காமல் செல்வது, ஓட்டுநர், நடத்துநர் பயணிகளிடம் நடத்தை விதிகளை மீறி செயல்படுவது, நேரத்திற்கு வராமல் இருப்பது உள்ளிட்டவை குறித்து 94875 99080 இந்த எண்ணில் புகார் தெரிவிக்கலாம். எல்லோரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!

News March 29, 2026

குமரி : செல்போன் யூஸ் பண்ணுறீங்களா? எச்சரிக்கை.!

image

குமரி உங்கள் போனுக்கு வரும் அழைப்புகள் மற்றும் OTP எண்களைத் திருட சைபர் குற்றவாளிகள் ‘கால் பார்வேர்டிங்’ முறையைப் பயன்படுத்தலாம். இதைச் சரிபார்க்க உங்கள் மொபைலில் *#21# என்று டயல் செய்யுங்கள். அங்கு வேறு எண்களுக்கு ‘Forward’ ஆகிறதா என்பதை அறியலாம். அப்படித் தகவல்கள் கசிந்தால், உடனடியாக ##002# என டயல் செய்து அனைத்துப் பார்வேர்டிங் வசதிகளையும் ரத்து செய்யலாம்.

News March 29, 2026

குமரியில் ஒரு தொகுதியில் அதிமுக Vs திமுக நேரடி போட்டி

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் திமுகவும் அதிமுகவும் நேரடியாக போட்டியிடுகிறது. குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய மூன்று தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் பாரதிய ஜனதா கட்சியும் நேரடியாக போட்டியிடுகிறது. பத்மநாபபுரம் தொகுதியில் CPI(M) – பாஜகவும் போட்டியிடுகிறது. நாகர்கோவில் தொகுதியில் திமுகவும் பாஜகவும் போட்டியிடுகிறது.

error: Content is protected !!