News August 26, 2024

காவலர் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எஸ் பி

image

இராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்த சசிகுமார் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இன்று (ஆக,26) நடைபெற்ற இறுதி அஞ்சலி நிகழ்வில், அவரது உடலுக்கு இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் ஐபிஎஸ் நேரில் சென்று மலர் வலையம் வைத்து அஞ்சலி செலுத்தி, இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார்.

Similar News

News September 8, 2025

இராமநாதபுரம் மாவட்டத்தின் சிறந்த காவல் நிலையம்

image

தமிழக காவல்துறை சேவையை மேம்படுத்தும் வகையில் மாநில, மாவட்ட அளவில், சிறந்த காவல் நிலையங்கள், தேர்ந்தெடுக்கப்பட்டு ஆண்டுதோறும், முதலமைச்சரின் கேடயம் வழங்கப்படுகிறது. அதன்படி இராமநாதபுரம் மாவட்டம், கமுதி காவல் நிலையம், 2023 ஆம் ஆண்டிற்கான, சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டு, தமிழக முதலமைச்சரின் கேடயம் பெற்றது. கேடயத்தை கமுதி, சார்புஆய்வாளர் சக்திகணேஷ், பெற்றுக்கொண்டார்.

News September 8, 2025

ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (செப்டம்பர் 07) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை, ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை தொடர்பு கொள்ளவும்.

News September 7, 2025

ராமநாதபுரம்: தேர்வு இல்லாமல் வங்கியில் சூப்பர் வேலை..!

image

ராமநாதபுரம் மக்களே கனரா வங்கியில் காலியாக உள்ள Sales & Marketing பணியை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாதம் ரூ.22,00 சம்பளம் வழங்கப்படுகிறது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் 05.09.2025 முதல் 06.10.2025 ம் தேதிக்குள், இந்த லிங்கை கிளிக் செய்து ஆன்லைன் மூலம் கட்டணமின்றி இலவசமாக விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லாமல் வேலை பெற அரிய வாய்ப்பு. உடனே அப்ளை பண்ணி இத்தகவலை நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!