News October 28, 2024

காவலரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதி

image

மயிலாடுதுறை மாவட்டம் பாகசாலை காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் பரந்தாமன்(39) நேற்று இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது பெருஞ்சேரி சுந்தரப்பன்சாவடி அருகே எதிர்பாராத விதமாக அரசு பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதயறிந்த முதல்வர் ஸ்டாலின் காவலரின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து நிவாரண நிதியாக ரூ. 25 லட்சம் வழங்கிட நேற்று உத்தரவிட்டுள்ளார்.

Similar News

News January 25, 2026

மயிலாடுதுறை: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் https://voters.eci.gov.in/login என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்ணை உள்ளீடு செய்யவும். பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். இத்தகவலை SHARE பண்ணுங்க.

News January 25, 2026

மயிலாடுதுறை மக்களே உஷார்- எச்சரிக்கை

image

மயிலாடுதுறை மாவட்ட பொதுமக்கள் இணையதளத்தில் வரும் கவர்ச்சிகரமான விளம்பரங்களை கண்டு ஏமாற வேண்டாம், அவற்றின் உண்மை தன்மையை ஆய்வு செய்து அங்கீகரிக்கப்பட்ட இணையதளமா என உறுதி செய்த பின்னர் பொருட்களை வாங்குமாறு மாவட்ட காவல்துறை பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும் இது போன்ற சைபர் குற்றங்கள் குறித்து 1930 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News January 25, 2026

மயிலாடுதுறை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விபரம்

image

மயிலாடுதுறை மாவட்டம்,மயிலாடுதுறை மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது, 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்

error: Content is protected !!