News October 23, 2024
காளிகேசம் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை

குமரி மாவட்டத்தில் மலையோர பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக கீரிப்பாறை மற்றும் காளிகேசம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதனால் கீரிப்பாறை மற்றும் காளிகேசம் சுற்றுலா மையங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு வனத்துறை இன்று தடை விதித்துள்ளது. அங்கு சுற்றுலாப் பயணிகள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
Similar News
News February 4, 2026
குமரி அருகே கல்லூரி மாணவர் தற்கொலை

ஆரல்வாய்மொழி பகுதியைச் சேர்ந்தவர் முத்து கிஷோர்(19). இவர் கல்லூரி ஒன்றில் டிப்ளமோ இரண்டாம் ஆண்டு படித்து வந்த நிலையில் நேற்று கல்லூரிக்கு செல்லாமல் இருந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப் பதிவு செய்து கல்லூரி மாணவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 3, 2026
குமரி: FIR பெறுவதில் சிக்கலா.? SP புதிய தகவல்

கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி ஸ்டாலின் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில், FIR உங்கள் உரிமை குறித்த போஸ்டர் அனைத்து காவல் நிலையங்களிலும் ஒட்டப்பட்டுள்ளது. அதில் புகார்தாரருக்கு FIR நகலை இலவசமாக பெரும் உரிமை இருப்பது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் 7708239100 என்ற பப்ளிக் ஃபீடுபேக் சென்டர் எண்ணை தொடர்பு கொண்டு புகாரளிக்கலாம் என்று அதில் அவர் கூறியுள்ளார்.
News February 3, 2026
குமரி: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <


