News March 25, 2025
கால் வலியால் முதியவர் எடுத்த விபரீத முடிவு

திருவண்ணாமலை மாவட்டம் சுருட்டல் கிராமத்தைச் சோ்ந்தவா் மணி (60). இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காலில் காயம் ஏற்பட்டு தொடா்ந்து வலி இருந்து வந்தது. இந்த நிலையில், நேற்று முன்தினம் (மார்.23) வலி அதிகமாக இருந்ததால், அதனை தாங்கிக் கொள்ள முடியாமல் வயலில் தெளிக்க வைத்திருந்த பூச்சி மருந்தைக் குடித்துள்ளாா். உறவினர்கள் அவரை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தபோது அவர் உயிரிழந்தது தெரிந்தது.
Similar News
News April 19, 2025
திருமணத்தடை நீக்கும் வைகுண்ட பெருமாள்

குன்றத்தூர் அருகேவுள்ள மாங்காட்டில் ஸ்ரீ வைகுண்ட பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஸ்ரீ காமாட்சியின் திருமணத்தை காண வந்த விஷ்ணு பகவான், திருமணம் இடம் மாற்றப்பட்ட பின் இங்கேயே கோயில் கொண்டார் . இக்கோயிலின் சிறப்பம்சம் பணப்பிரச்னையால் தடை படும் திருமணங்கள் நடைபெற இக்கோயிலுக்கு வந்து பக்தர்கள் வழிபடுகின்றனர். நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
News April 19, 2025
காஞ்சியில் நாளைய (ஏப்ரல் 20) மின்தடை விவரம்

ஸ்ரீபெரும்புதுார் துணைமின் நிலையம்: மப்பேடு, செங்காடு, உசேன் நகர், விஸ்வநாதகுப்பம், அமுஞ்சிவாக்கம், சமத்துவபுரம், இருங்காட்டுக்கோட்டை, நெமிலி, சிவன்தாங்கல், என்.ஜி.ஓ., காலனி, சுகம்தரும்பேடு, தண்டலம், மேவலுார்குப்பம், மண்ணுார், நயப்பாக்கம், பாப்பரம்பாக்கம் ரோடு, வளர்புரம், கிறிஸ்தவ கண்டிகை, செட்டிபேடு ஆகிய பகுதிகளில் நாளை காலை 9:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை மின்தடை ஏற்படும். ஷேர் பண்ணுங்க
News April 19, 2025
விஸ்வகர்மா திட்டம் சமூக நீதிக்கான திட்டம் அல்ல

குன்றத்தூரில் இன்று (ஏப்ரல் 19) கலைஞர் கைவினைத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துப் பேசினார். அப்போது, “விஸ்வகர்மா திட்டம் சமூக நீதிக்கான திட்டம் அல்ல. குலத்தொழிலை ஊக்குவிக்கிறது. விஷ்வகர்மா திட்டம் படிப்பை விட்டு வெளியேற்றி குடும்ப தொழிலை செய்ய ஊக்குவிக்கிறது. படிப்பை விட்டு குலத்தொழிலுக்கு செல்லுமாறு மாணவர்களை வஞ்சிக்க மத்திய அரசு திட்டம் தீட்டுவதாக” கூறினார்.