News November 9, 2025

கால்வாயில் தவறி விழுந்த நபர் உயிரிழப்பு

image

திருச்சி மாவட்டம் எஸ் கண்ணனூர் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார்(51). டீ மாஸ்டராக பணிபுரிந்து வந்த இவர், நேற்று சமயபுரம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு இருந்த கால்வாயில் தவறி விழுந்து மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார். இது குறித்த தகவல் அறிந்து வந்த சமயபுரம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News November 9, 2025

திருச்சி: உங்கள் PAN ரத்து செய்யப்படலாம்

image

பான் கார்டு பெறுவதில் நடைபெறும் மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் கட்டாயம் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு ரத்து செய்யப்பட்டு, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க <>eportal.incometax.gov.in<<>> என்ற இணையத்தளத்திற்கு சென்று உங்கள் ஆதார் & பான் கார்டினை மிக எளிதாக இணைத்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!

News November 9, 2025

முதல்வரிடம் பிறந்தநாள் வாழ்த்து பெற்ற அமைச்சர் நேரு

image

நகராட்சி நிர்வாக துறை அமைச்சரும், திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், திமுக முதன்மைச் செயலாளருமான கே.என்.நேரு இன்று தனது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த சந்திப்பின்போது, திமுக நிர்வாகிகள், செயலாளர்கள், கழகத் தொண்டர் அணியினர், மகளிர் அணியினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

News November 9, 2025

திருச்சி: அரசு வேலை – தேர்வு இல்லை!

image

திருச்சி மாவட்டத்தில் காலியாக உள்ள 72 கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே (நவ.9) கடைசி நாளாகும்.
1. கல்வி தகுதி: 10-ம் வகுப்பு
2. சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400 வரை
3. தேர்வு முறை: நேர்காணல் மட்டும்
4. வயது வரம்பு: 18-32 (SC/ST-37, OBC-34)
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK HERE <<>>
6. இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!